search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலப் பிரதேசம் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார், ராகுல் காந்தி
    X

    இமாச்சலப் பிரதேசம் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார், ராகுல் காந்தி

    இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வீரபத்ர சிங் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
    சிம்லா:

    இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீர்மானித்துள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, சிம்லா அருகேயுள்ள மாண்டி பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார்.

    அடுத்த தேர்தலிலும் முதல்வர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வீரபத்ர சிங் நீடிப்பார் என அறிவித்த ராகுல் காந்தி, அவரது ஆட்சியில் இந்த மாநிலம் அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    வீரபத்ர சிங் தலைமையிலான அரசு 70 ஆயிரம் வாலிபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் ராகுல் சுட்டிக் காட்டினார்.

    வீரபத்ர சிங் தலைமையிலான அரசு கடந்த நான்காண்டுகளில் 1500 புதிய பள்ளிகளையும், சுகாதார மையங்களையும் திறந்துள்ளது. ஆனால், குஜராத்தில் அப்படி எதுவுமே நடைபெற்றதில்லை. இங்கு 55 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், குஜராத்தில் வெறும்10 கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டன.

    இங்குள்ள விதவை பெண்களுக்கு காங்கிரஸ் அரசால் 750 ரூபாய் உதவிப்பணம் அளிக்கப்படுகிறது. ஆனால், பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் 400 ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்திரா ஆவாஸ் யோஜானா திட்டத்தின்கீழ் இங்குள்ள பயனாளிகளுக்கு 1.30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதே திட்டத்தின்கீழ் குஜராத் அரசு வழங்கும் தொகை வெறும் 70 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

    இத்தனை நல்ல திட்டங்களை நிறைவேற்றி, காங்கிரஸ் ஆட்சிக்கு முன்மாதிரியான ஒரு அரசை நடத்திவரும் வீரபத்ர சிங், ஏழாவது முறையாகவும் இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். இங்கு பா.ஜ.க.வால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
    Next Story
    ×