search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெற்ற குழந்தை ரோஹித்தை மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் வாழ்த்தினார்
    X
    சிகிச்சை பெற்ற குழந்தை ரோஹித்தை மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் வாழ்த்தினார்

    இதய நோயுடன் வந்த பாகிஸ்தான் குழந்தை சிகிச்சை முடிந்து சுஷ்மா சுவராஜ் உடன் சந்திப்பு

    இதய நோயுடன் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த 4 மாத குழந்தைக்கு நொய்டாவில் சிகிச்சை முடிந்து மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை குழந்தையின் பெற்றோர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானை சேர்ந்தவர் சித்திக் கன்வால். இவரது மனைவி ஆனம் இவர்களுக்கு ரோஹித் என்ற 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

    குழந்தை ரோஹித் திடீரென இதய நோயால் அவதிப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்தனர்.

    இதற்கு பாகிஸ்தானில் சிகிச்சை வசதி இல்லை. எனவே இந்தியாவில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். ஆனால் தற்போது எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சித்திக்கன்வால்-ஆனம் தம்பதிக்கு ‘விசா’ அளிக்க இந்திய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    எனவே, அவர்கள் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் உதவியை நாடினர். அதையடுத்து அவரது தலையீட்டின் பேரில் இந்தியா வர விசா கிடைத்தது.

    அதை தொடர்ந்து குழந்தை ரோஹித்துடன் இந்தியா வந்த அவர்கள் நொய்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்றனர். பூரண குணம் அடைந்த பின் தங்கள் குழந்தையுடன் பாகிஸ்தான் திரும்பினர்.

    அதற்கு முன் மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜை பாகிஸ்தான் தம்பதி சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து சிரித்த முகத்துடன் இருக்கும் குழந்தை ரோஹித் படத்தை மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.



    அதில் குழந்தை ரோஹித் நீடுழி வாழ வேண்டும். அவன் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×