search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். #ParliamentElection #MKStalin #BJP
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாராளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார். எனவே, இதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த அழைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல் கட்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன்தான் அதிமுக கூட்டணி வைக்கும் என கூறினார்.

    1999-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #MKStalin #BJP
    Next Story
    ×