search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை அளித்தார் தமிழக கவர்னர்
    X

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை அளித்தார் தமிழக கவர்னர்

    கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #Banwarilalpurohit
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ள பாதிப்புக்கு ஆளான கேரளாவில் முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளேன் என அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக மற்றும் திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #Banwarilalpurohit
    Next Story
    ×