search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திரி வெயில் தொடங்கியது- 24 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்
    X

    கத்திரி வெயில் தொடங்கியது- 24 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரி வெயில் இருக்கும். #agninatchathiram #kathiriveyil #summer
    சென்னை:

    கோடை காலம் தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தியது. வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவித்தனர். வாகனங்களில் செல்வோர் சூடான காற்றால் அவதியடைந்தனர்.

    மே மாத தொடக்கத்திலேயே வேலூர், திருத்தணியில் அதிக பட்சமாக 109 டிகிரில் வெயில் கொளுத்தியது. சென்னையில் 96 டிகிரி வரை கொளுத்தியது.

    அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளதால் அக்னி நட்சத்திரத்துக்கு பிறகு இன்னும் வெயில் அளவு கூடும் என்று அஞ்சப்படுகிறது.


    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரி வெயில் இருக்கும்.

    தற்போது கொளுத்தும் வெயிலையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு அக்னி நட்சத்திர வெயில் எப்படி இருக்குமோ என்ற கவலை இருக்கிறது.

    24 நாட்கள் வாட்டி எடுக்கும் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் அதன் தாக்கம் குறைய நாட்கள் ஆகும். எனவே வெயிலை சமாளிக்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, “மே மாதம் முழுவதும் வெப்ப நிலை அதிகமாக காணப்படும். கிழக்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளான வேலூர், திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மாலை அல்லது இரவு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளான கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கோடை மழை பெய்யும். மழை இல்லாத காலங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” என்றனர்.

    இந்தாண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #agninatchathiram #kathiriveyil #summer
    Next Story
    ×