என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "agni natchathiram"
- தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.
- வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சென்னை :
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப் போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. கடந்த வாரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பப்பதிவாக தற்போது வரை இருந்துவருகிறது.
இந்த நிலையில் வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெற உள்ளது. இதற்கு பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆனால் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் காலகட்டம் மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நாளை (28-ந்தேதி) விடைபெறுகிறது.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது.
அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வறுத்தெடுக்க தொடங்கியது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.
அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெயில் தணிந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக கடந்த 23-ந்தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
அதேபோல் கடந்த 24-ந்தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் அனல் சுட்டெரித்தது. மேலும் 24-ந்தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.
நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் வெயில் பதிவானது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலக்கட்டத்தில் சென்னை தமிழகத்தின் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அக்னி நட்சத்திரத்தின் நடு பகுதியில் இதமான காலநிலை நிலவியது.
இந்த நிலையில் மழை குறைந்துள்ள நிலையில் தற்போது கத்திரி வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ள நிலையில் பொது மக்களை வெயில் வறுத்தெடுக்கிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இது இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச வெப்பநிலை ஆகும். சென்னை நுங்கம்பாக்கம், திருத்தணி, வேலூர், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது. தமிழகத்தில் மொத்தம் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 66 டிகிரி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அதிக வெயில் கொளுத்தி வருகிறது.
மீனம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் அதிக அளவு வெயில் பதிவானதால் அந்த பகுதியில் ஈரப்பதம் தலா 76 மற்றும் 57 சதவீதமாக குறைந்தது. மேலும் நாளையும், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் காற்று நிலத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்ததால் வெப்பநிலை உயர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுவையில் மார்ச் மாத இறுதியில் கோடை காலம் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
இதற்கிடையே இந்த ஆண்டு மே 4-ந்தேதி அக்னி வெயில் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
ஒரு சில நாட்கள் 100 டிகிரியை தாண்டி புதுவை மக்களை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகலில் வெளியே நடமாட முடியாத நிலையில் மக்கள் இருந்தனர்.
இன்றுடன் அக்னி வெயில் விடைபெறுகிறது. 25 நாட்களாக வாட்டி வதைத்த அக்னி வெயில் விடைபெறுவது புதுவை மக்களுக்கு நிம்மதி பெரு மூச்சை உருவாக்கி உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்துவந்த நிலையில், 5-ந்தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. கோடை வெயிலுக்கே நொந்து போயிருந்த மக்கள், தகிக்கும் ‘கத்திரி’ வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளாகினர்.

பொதுவாகவே கோடைகாலத்தில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதலாக அமையும். ஆனால் இந்தமுறை குறிப்பிட்டு சொல்லும்படி தமிழகத்தில் மழை இல்லை. குறிப்பாக சென்னையில் மழைக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ‘பானி’ புயலும் திசைமாறி மழையை கொடுக்கவில்லை.
ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கத்திரி வெயில் காலம் அமைந்துவிட்டது.
கத்திரி வெயில் காரணமாக சென்னை, மதுரை, கரூர், தர்மபுரி, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், நாகை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்து எடுத்தது. பல நாட்களாக திருத்தணியிலேயே அதிகபட்ச வெயில் பதிவானது.
இந்நிலையில் மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் காலம் நாளையுடன் (புதன்கிழமை) விடைபெறுகிறது. இதையடுத்து வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி இப்போதே மக்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ‘பானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘பானி’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உப்புச்சத்து மற்றும் நீர் சத்து குறைவு ஏற்படும். அதிக அளவில் தாகம், உடல் சோர்வு, தலைவலி, தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதிக அளவில் தண்ணீர் அருந்துவதோடு, நுங்கு, பதனீர், இளநீர், மோர், தர்பூசணி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.
சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.
இந்த கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்னி வெயில் காலத்தின் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது. திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை சுட்டெரித்தது.
வெயில் உக்கிர காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சீரான வெப்ப நிலை இல்லாதவர்களுக்கு வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படும்.
தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை நீடிப்பதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது. ஆனாலும் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #kathiriVeyil #AgniNatchathiram
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
அதன் பிறகு தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்த தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர், பரமத்தி உள்ளிட்ட பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. நேற்று திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், வேலூரில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.

கத்திரி வெயிலுக்கும், வானிலை ஆய்வு மையத்துக்கும் தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவ மழை தமிழகத்தை நெருங்கி வரும்போது ஈரப்பத காற்று வீசக்கூடும். அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் வெப்பம் மேலும் குறையும்.
வெப்பச்சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #kathiriVeyil #AgniNatchathiram
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்