என் மலர்

  செய்திகள்

  அக்னி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது
  X

  அக்னி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. இதையடுத்து படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.
  புதுச்சேரி:

  புதுவையில் மார்ச் மாத இறுதியில் கோடை காலம் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

  இதற்கிடையே இந்த ஆண்டு மே 4-ந்தேதி அக்னி வெயில் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

  ஒரு சில நாட்கள் 100 டிகிரியை தாண்டி புதுவை மக்களை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகலில் வெளியே நடமாட முடியாத நிலையில் மக்கள் இருந்தனர்.

  இன்றுடன் அக்னி வெயில் விடைபெறுகிறது. 25 நாட்களாக வாட்டி வதைத்த அக்னி வெயில் விடைபெறுவது புதுவை மக்களுக்கு நிம்மதி பெரு மூச்சை உருவாக்கி உள்ளது.

  Next Story
  ×