என் மலர்
நீங்கள் தேடியது "Kathiri Veyil"
- தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளில் மழைபெய்யும்.
- ஆந்திராவுக்கு அருகில் உள்ள வேலூர் பகுதியில் தொடர்ந்து 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
சென்னை:
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் நடமாட முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. நாளை தொடங்கி 28-ந்தேதி வரை என 24 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என்பது நினைத்து மக்கள் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கத்திரி வெயில் நாளை தொடங்கினாலும், மழை காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாள் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைப் போலல்லாமல், இந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கு மிகவும் நல்லதாக இருந்தது. தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளில் மழைபெய்யும். ஆந்திராவுக்கு அருகில் உள்ள வேலூர் பகுதியில் தொடர்ந்து 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும். இது இப்பகுதிக்கு இயல்பானது. அங்கும் மழை தொடர்ந்து பெய்யும் என்றார்.
- தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
- இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.
கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100°F க்குமேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலை நினைத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கடந்த 8-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது.
சென்னை:
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. சில ஆண்டுகளில் கத்திரி வெயிலே தெரியாத வகையிலும் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள்மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது.
இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்குவதற்கு முந்தைய நாள் அதாவது மே 3-ந்தேதி ஈரோடு, திருத்தணி, வேலூர், கரூர், திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தொடர்ந்து கத்திரி வெயில் தொடங்கிய நாளில் இருந்து 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி காலநிலை இருந்தாலும், கடந்த 8-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது. கடந்த 4-ந் தேதி சென்னை மீனம்பாக்கம், கரூர், வேலூர் உள்பட 15 இடங்கள், கடந்த 7-ந்தேதி திருச்சி, மதுரை உள்பட 11 இடங்கள், 8-ந்தேதி கரூர், நாமக்கல் உள்பட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
தொடர்ந்து 24-ந்தேதி வரை பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் கத்திரி வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கத்திரி வெயில் நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனாலேயே பள்ளிகள் ஜூன் 6-ந்தேதிக்கு திறக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.
சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.
இந்த கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்னி வெயில் காலத்தின் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது. திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை சுட்டெரித்தது.
வெயில் உக்கிர காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சீரான வெப்ப நிலை இல்லாதவர்களுக்கு வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படும்.
தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை நீடிப்பதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது. ஆனாலும் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #kathiriVeyil #AgniNatchathiram
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
அதன் பிறகு தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்த தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர், பரமத்தி உள்ளிட்ட பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. நேற்று திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், வேலூரில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.

கத்திரி வெயிலுக்கும், வானிலை ஆய்வு மையத்துக்கும் தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவ மழை தமிழகத்தை நெருங்கி வரும்போது ஈரப்பத காற்று வீசக்கூடும். அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் வெப்பம் மேலும் குறையும்.
வெப்பச்சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #kathiriVeyil #AgniNatchathiram






