search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம்-ராஜபாளையத்தில் தி.மு.க.-காங். ஆர்ப்பாட்டம்
    X

    ராமநாதபுரம்-ராஜபாளையத்தில் தி.மு.க.-காங். ஆர்ப்பாட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியு றுத்தி தி.மு.க., சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியு றுத்தி தி.மு.க., சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகர செயலாளர் கார்மேகம், மண்டபம் ஒன்றிய செயலாளர் கனகுராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, நகர வர்த்தக அணி அமைப்பாளர் மோகன்பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, இலக்கிய அணி நிர்வாகி கிருபானந்தம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், விவசாய அணி நிர்வாகி கிருஷ்ணன் வாண்டையார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அப்பாஸ் கனி, ஓம் சக்தி நகர் கிளை நிர்வாகி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு) குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையாக உள்ள மத்திய அரசை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தயக்கம் காட்டும் தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் நடந்தது.

    மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்., காரியகமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், சிறப்பு அழைப்பாளர் விக்டர் முன்னிலை வகித்தனர்.

    நகர் தலைவர் கோபி, மாவட்ட பொருளாளர் பாரிராஜன், மாவட்ட தலைவர்கள் சகுந்தலா (மகளிரணி), ராஜ சேகர் (எஸ்.சி., எஸ்.டி., பிரிவு), வழக்கறிஞர் சரவணகாந்தி (இளைஞர் காங்கிரஸ்), மாநில பேச்சாளர் ஆலிம், வட்டாரத் தலைவர்கள் சேதுபாண்டியன், கோபால், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், பாராளுமன்ற தொகுதி முன்னாள் தலைவர் மணிகண்டன், ராமேசுவரம் நகர் தலைவர் ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் நன்றி கூறினார். மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது

    வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜ பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேற்கு மாவட்டத்தலைவர் தளவாய்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    எஸ்.சி.எஸ்.டி.பிரிவு தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்குதுரை, மாவட்டத் துணைத்தலைவர்கள் அய்யனார், ராஜ்மோகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஜாபர்சித்திக், வட்டாரத் தலைவர்கள் (மேற்கு)கணேசன், (கிழக்கு) ரங்கசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி காளீஸ்வரி, நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×