என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கடைக்குட்டி சிங்கம்
Byமாலை மலர்20 Jan 2018 4:19 PM GMT (Updated: 20 Jan 2018 4:19 PM GMT)
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகி வரும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம்` கடைக்குட்டி சிங்கம்'.
இதில், கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - டி.இமான் ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, இயக்கம் - பாண்டிராஜ்.
விவசாயத்தை பெருமைபடுத்தும் படமாக இது உருவாகிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் பொங்கல் தினத்தையொட்டி வெளியானது. அதில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார்த்தி உட்கார்ந்து இருக்கிறார். அதில் லுங்கி, தலைப்பாகை கட்டி கிராமத்து இளைஞராக காட்சி அளிக்கிறார்.
மோட்டார் சைக்கிளின் முன்னால் `விவசாயி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. `கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தின் தலைப்பின் கீழே `பயிர் செய்யவிரும்பு' என்ற துணைத்தலைப்பு இடம் பெற்றுள்ளது. எனவே, இது முழுக்க முழுக்க விவசாயத்தை கருவாக கொண்ட கதை என்பது உறுதியாகி உள்ளது. சூர்யா தயாரிப்பில், அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதனால் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Next Story
×