search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
    X

    ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்

    ரஜினிகாந்த், விஜய்யின் படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில், இந்த இரு படங்களின் படவிழாவும் ஒரே நாளில் நடக்க இருப்பதாகவும், அதில் ரஜினி, விஜய் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. #Rajinikanth #Vijay
    ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். படத்தின் தலைப்பு இன்று வெளியாக இருக்கிறது.

    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்பதால் அக்டோபர் 2-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நாளில் ரஜினிகாந்த் படத்தின் இசை அல்லது டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



    இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக நடத்த படக்குழு திட்டமிடுகின்றனர். ஒரே நிகழ்ச்சியாக நடைபெறும் பட்சத்தில் தென் இந்தியாவின் முக்கிய சினிமா பிரபலங்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி, விஜய் இருவரது படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth #Vijay #Sarkar

    Next Story
    ×