search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அடுத்த மாதம் துவங்கும் அஜித்தின் விஸ்வசம் படப்பிடிப்பு
    X

    அடுத்த மாதம் துவங்கும் அஜித்தின் விஸ்வசம் படப்பிடிப்பு

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

    சிவா - அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

    இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். #Viswasam #AjithKumar

    Next Story
    ×