என் மலர்
உலகம்
- உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
- ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோ:
உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
நான்காவது ஆண்டு நிறைவை குறிக்கும் நாளில், ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோவில் சவ்யோலேவ்ஸ்கி ரயில் நிலையம் அருகே நள்ளிரவு போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் போக்குவரத்து போலீசார் வாகனம் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் இதில் உயிரிழந்தார்.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
- அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது.
- பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரலாறு காணாத பனிப்புயலால் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் பத்திரிகை, தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்துப்பட்டுள்ளது.
பாஸ்டன் குளோப் அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டாலில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளது. பனிப்புயலால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது என்பதாலேயே நாளிதழ் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி பாஸ்டன் குளோப், 1872-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- எல் மென்சோவுடன் சேர்த்து கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
- துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடின்னான்
லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.
கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எல் மென்சோ எப்படி சிக்கினான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எல் மென்சோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே அமெரிக்க உளவு அமைப்பான CIA வழங்கிய ரகசியத் தகவல்களின் அடிப்படையில், மெக்சிகோ ராணுவம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது.
எல் மென்சோவின் காதலியின் நடமாட்டத்தை ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. பிப்ரவரி 20 அன்று, அவரது தோழி ஒருவரைப் பின்தொடர்ந்ததன் மூலம் எல் மென்சோ கிராமப்புறம் ஒன்றில் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டறியப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது எல் மென்சோவின் பாதுகாவலர்கள் ராணுவத்தின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சேதமடைந்து அவசரமாகத் தரைஇறக்கப்பட்டது.
துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடிய எல் மென்சோவை ராணுவம் துரத்திப் பிடித்தது. சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்குக் கொண்டு செல்லும் வழியில் எல் மென்சோவின் உயிர் பிரிந்தது.
மென்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில் இதில் 25 பாதுகாப்புப் படையினர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் நிலவும் இந்த உள்நாட்டுக் கலவரம் மற்றும் வன்முறை, அங்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
- ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ?
- எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தான்.
அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பிப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.
எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தின் போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்தனர்.
அந்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டான்.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப்,
"நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக வினவினார்.
மேலும், "ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள்.
ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் கிண்டலாகப் பேசினார்.
கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
டிரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும்.
மத்திய ஈரானில் உள்ள ஒரு பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானிய இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில், நாட்டின் இஸ்பஹான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரின் போது அமெரிக்காவால் தாக்கப்பட்ட அணுசக்தி தளம் இஸ்பஹானில் உள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமானி மற்றும் துணை விமானி விபத்தில் இறந்தனர். விபத்து காரணமாக சந்தையில் இருந்த குப்பைகள் மற்றும் புகை எழும் காட்சிகளைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், விபத்தில் சந்தையில் இருந்த இரண்டு பேர் விபத்தில் இறந்ததாக கூறியது. ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும். ஈரானின் மேற்கு நகரமான ஹமேடான் அருகே ஒரு F-4 போர் விமானம் விபத்துக்குள்ளானது, அந்த விபத்தின் போது விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் வீசத்தொடங்கியது. இதன் காரணமாக அங்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு "ப்ளிசர்டு" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பனிப்புயல் தாக்கத்தால், பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுவதும் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகர பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
- இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் பிப்.26ம் தேதி 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்தி சென்றது.
- ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஆட்சி மாறினாலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது.
சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்திச் சென்றது.
ஆள் நடமாட்டமற்ற பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண், மூன்று பேரால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரை கடுமையாக தாக்கியும் அவர்கள் துன்புறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சுயநினைவின்றி அப்பகுதியில் கிடந்த அவரை மீட்ட உள்ளூர் மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரிகிறது.
காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து உள்ளூர் மக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் கடந்த வாரம் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
- குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
- மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது.
ரஷியா, இன்று (பிப்ரவரி 23) உக்ரைன் மீது 126 டிரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை 105 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியது. இருப்பினும், 20 ட்ரோன்களும் ஏவுகணையும் 11 இடங்களில் தாக்கின. இதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர்.
ஒடெசா, ஜபோரிஜியா, கெர்சன்,டொனெட்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது. ஆனால் அவை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதனால் மாஸ்கோவில் தாற்காலிகமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு பின் செயல்பாட்டுக்கு வந்தன.
முந்தைய நாள் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் உக்ரைன் இந்த தாக்குதலை பதிலடியாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் எல் மென்சோ.
- +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம்.
லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.
கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களை எரிப்பது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மெக்சிகோ விமான நிலையங்களிலும் வன்முறை பரவியது. இதனால் முக்கிய நகரங்களில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அங்குள்ள இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் போன் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
பின்வரும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது:
ஜாலிஸ்கோ, தமௌலிபாஸ், மைக்கோகன், குயிரெரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம்.
- கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- மகள் கிம் ஜு ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வடக் கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 9வது மாநாட்டில் கிம் ஜாங் உன் ஒருமனதாக மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2016-ல் மீண்டும் தொடங்கப்பட்டது. இம்மாநாட்டில் பேசிய கிம் ஜாங், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு "கடுமையான பொருளாதாரத் தடைகளையும்" தட்டுப்பாடுகளையும் முறியடித்து, பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரவித்தார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொருளாதாரக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது கட்சியின் கடமை எனவும் தெரிவித்தார்.
அடுத்ததாக இவரது மகள் கிம் ஜு ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் தனது தந்தையுடன் பல முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாடுகளில் உள்ள வங்கதேசத் தூதரகங்களில் இருந்து அதிபரின் உருவப்படங்கள் ஒரே இரவில் அகற்றப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம்
- எனது வெளிநாட்டுப் பயணங்களை இரண்டு முறை தடுத்தார்.
வங்கதேசத்தில் நோபல் பரிசுவென்ற முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகவும், தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரண்டு முறை ரத்து செய்ததாகவும் அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர்,
"முகமது யூனுஸ் 14 முதல் 15 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை கூட அது குறித்து முறைப்படி என்னிடம் (அதிபருக்கு) தெரிவிக்கவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயக் கடமையாகும்." என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வங்கதேசம்-அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக பேசியவர்,
'அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற ஒரு மாநில ஒப்பந்தம் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, முந்தைய அரசாங்கத் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தனர். இது ஒரு அரசியலமைப்பு கடமை. ஆனால் அவர் [யூனுஸ்] அதைச் செய்யவில்லை," என்றுக் கூறினார்.
"அவர் [யூனுஸ்] எனது வெளிநாட்டுப் பயணங்களை இரண்டு முறை தடுத்தார். ஒன்று கொசோவோவிற்கு. இந்த சம்பவம் கடந்த டிசம்பரில் நடந்தது. மற்றொரு சந்தர்ப்பத்தில், கத்தார் எமிரின் அழைப்பிற்கு, அவர் வேலையாக இருப்பதாகக் கூறி, அதில் பங்கேற்க முடியாது என வெளிவிவகார அமைச்சகம் ஒரு கடிதத்தை அனுப்பியது.
அடிப்படையில், அந்த அரசாங்கம் என் பெயர் எங்கும் வருவதை விரும்பவில்லை. அவர்கள் என்னை முழுமையாக இருட்டில் வைத்திருக்க முயன்றனர். மக்கள் என்னை அடையாளம் காண அவர்கள் விரும்பவில்லை. அவர் அரசியலமைப்பின் எந்த விதியையும் பின்பற்றவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேசத் தூதரகங்களில் இருந்து அதிபரின் உருவப்படங்கள் ஒரே இரவில் அகற்றப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் தற்போதைய வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை பாராட்டிய அவர், அவர் மிகவும் நேர்மையான நபர் என தெரிவித்துள்ளார்.






