என் மலர்
நீங்கள் தேடியது "boston"
- அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது.
- பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரலாறு காணாத பனிப்புயலால் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் பத்திரிகை, தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்துப்பட்டுள்ளது.
பாஸ்டன் குளோப் அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டாலில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளது. பனிப்புயலால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது என்பதாலேயே நாளிதழ் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி பாஸ்டன் குளோப், 1872-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
- வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்
வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).
1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.
அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.
கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.
மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.
இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.
அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.
"10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.
2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.
பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.
அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
- தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன்
- ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.







