ஜஸ்ட் 81 தான்.. உலகின் மிக வயதான பெண் ரயில் ஓட்டுநர் சொல்வது என்ன?

தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன் ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்ட் 81 தான்.. உலகின் மிக வயதான பெண் ரயில் ஓட்டுநர் சொல்வது என்ன?
Published on

 வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com