search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூண்டாய்"

    • புதிய ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • கிரெட்டா EV மாடல் தோற்றத்தில் அதன் ஐசி என்ஜின் கொண்ட வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மிட் சைஸ் எஸ்யுவி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கிரெட்டா EV மாடல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. பொது வெளியில் சோதனை செய்யப்படும் கிரெட்டா EV மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    புகைப்படங்களின் படி கிரெட்டா EV மாடல் தோற்றத்தில் அதன் ஐசி என்ஜின் கொண்ட வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் பம்ப்பர்கள் வித்தியாசமான நிறம் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கிரெட்டா EV ப்ரோடக்ஷன் வெர்ஷனில் பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

     

    எலெக்ட்ரிக் கார் என்பதால், இந்த மாடலில் எக்சாஸ்ட் டெயில்பைப் இடம்பெறவில்லை. மேலும் பேட்டரி பேக் காரின் பக்கவாட்டில் இருந்தே பார்க்க முடிகிறது. ப்ரோடோடைப் மாடலில் சார்ஜிங் போர்ட் என்ஜின் வைக்கப்படும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இறுதி வெர்ஷனில் சார்ஜிங் போர்ட் ஃபெண்டர் அல்லது முன்புற கிரில் அருகில் தனியே வழங்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய கிரெட்டா EV மாடல் E-GMP ஆர்கிடெக்ச்சரின் ரி-என்ஜினீயர்டு வெர்ஷனை தழுவி உருவாக்கப்படும் என்றே தெரிகிறது. கிரெட்டா EV மாடல் இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. கிரெட்டா EV மாடல் அடுத்த ஆண்டு அல்லது 2025 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா செடான் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை எக்ஸ்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் வென்யூ காரின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் அனைத்து ஹூண்டாய் கார்களையும் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார்கள் E20 எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    Photo courtesy: Rushlane

    • புதிய எக்ஸ்டர் மாடலின் உற்பத்தி 2023 ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.
    • புதிய எக்ஸ்டர் மாடல் வித்தியாசமான முன்புறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்வதை கடந்த மாதம் சூசகமாக அறிவித்தது. இந்த வரிசையில், தற்போது புதிய எக்ஸ்டர் மாடல் வெளிப்புற தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் டீசரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய எக்ஸ்டர் மாடலின் உற்பத்தி 2023 ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.

    மேலும் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மாடலின் வெளியீடு நடைபெறலாம். இந்தியாவுக்காக உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைகளிலும் எக்ஸ்டர் மாடல் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் எவ்வித ஹூண்டாய் மாடல்களிலும் இல்லாத அளவுக்கு புதிய எக்ஸ்டர் மாடல் வித்தியாசமான முன்புறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    சென்சுவஸ் ஸ்போர்டினஸ் டிசைன் மொழியை தழுவி புதிய எக்ஸ்டர் மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், H வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. இதேபோன்ற டிசைன் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் மேலும் சில ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய எக்ஸ்டர் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த காரின் பின்புறம் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், லைட் பார், ஃபௌக்ஸ் கிளாடிங், விசேஷமான வீல் ஆர்ச்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அளவில் 3.8 மீட்டர் நீளமாக இருக்கும் என தெரிகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எக்ஸ்டர் எஸ்யுவி வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடல் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் டாடா பன்ச் மாடலுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வென்யூ, கிரெட்டா, அல்கசார், கோனா EV, டக்சன் மற்றும் ஐயோனிக் 5 வரிசையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடலாக எக்ஸ்டர் இணைகிறது.

    சர்வதேச நாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதவிர புதிய ஹூண்டாய் கார் சமீபத்தில் இந்தியாவிலும் டெஸ்டிங் செய்யப்பட்டது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் ஹூண்டாய் எஸ்யுவி மாடலில் பிளாக்டு-அவுட் பி-பில்லர், ரூஃப் ரெயில்கள், சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட ORVMகள் வழங்கப்படுகின்றன.

     

    பவர்டிரெயினை பொருத்தவரை புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 வெர்னா டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
    • புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 வெர்னா மாடலின் விலை அறிவிக்கும் போதே இதனை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 2023 ஹூண்டாய் வெர்னா கார் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக கடந்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி புதிய ஹூண்டாய் காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

     

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெர்னா மாடல் முன்பதிவில் அசத்தி வருகிறது.
    • சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 ஹூண்டாய் வெர்னா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.37 லட்சம் ஆகும்.

    ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. நேற்று இந்த காருக்கான முன்பதிவு துவங்கியது. இந்த நிலையில், 2023 ஹூண்டாய் வெர்னா மாடலை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     

    சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் நிலையில், 2023 வெர்னா துவக்கத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே வெர்னா காரை பயன்படுத்துவோர் மற்றும் இளம் வாடிக்கையாளர்கள் புதிய வெர்னா மாடலை வாங்குவர் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் நிறுத்தப்பட்டு விட்டது.

    புதிய வெர்னா மாடலின் வெளிப்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது எல்இடி லைட் பார் மற்றும் முற்றிலும் புதிய பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2023 வெர்னா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இரண்டு விதமான பவர்டிரெயின், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    காரின் வெளிப்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது எல்இடி லைட் பார் மற்றும் முற்றிலும் புதிய பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    உள்புறத்தில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஒற்றை ஸ்கிரீன், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட், கிளைமேட் கண்ட்ரோலர் உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது.

     

    டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெர்னா மாடல் சில தினங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில வாரங்களாக முற்றிலும் புதிய மிட்-சைஸ் செடான் மாடலுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய வெர்னா மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. வெளிப்புறம் புதிய தலைமுறை வெர்னா மாடல் ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலான்ட்ரா காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட் பம்ப்பர் உள்ளது.

     

    இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பொனெட், எல்இடி லைட்டிங் சிஸ்டம், பக்கவாட்டில் கேரக்டர் லைன், முற்றிலும் புதிய அலாய் வீல்கள், ஃபாஸ்ட்-பேக் ஸ்டைல் ரூஃப்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், பெரிய ஸ்பாயிலர், ரிவைஸ்டு ரியர் பம்ப்பர் உள்ளது. 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி புதிய தலைமுறை வெர்னா மாடலின் உள்புறம் அளவில் பெரிய டச்ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வளைந்த டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு MT மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் புது வேரியண்டை அறிமுகம் செய்தது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடல் மேனுவல் மற்றும் AMT என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிராண்ட் i10 நியோஸ் விலை ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்ட் மேனுவல் மற்றும் AMT என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றின் விலை முறையே ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம் என்றும் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட் மேக்னா வேரியண்டின் மேல், ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், 15 இன்ச் டூயல் டோன் ஸ்டைல் கொண்ட வீல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரியர் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    • இந்தியாவில் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு தொடரந்து அதிகரித்து வருகிறது.
    • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா 2023 மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கிரெட்டா, வென்யூ, வெர்னா, கிராண்ட் i10 நியோஸ், i20 மற்றும் ஆரா போன்ற மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    இந்த மாதம் ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் கிரெட்டா, வென்யூ, அல்கசார் அல்லது டக்சன் போன்ற மாடல்களை வாங்கும் பட்சத்தில் எவ்வித சலுகைகளும் தற்போது வழங்கப்படவில்லை. இந்தியாவில் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இவற்றின் காத்திருப்பு காலம் அதிகரிப்பதால், இவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

     

    எனினும், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அல்லது i20 மாடல்களை வாங்கும் பட்சத்தில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகளும், i20 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் ஆரா மாடலுக்கு ரூ. 33 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா 2023 மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. புதிய மிட் சைஸ் எஸ்யுவி மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் ஹோண்டா சிட்டி 2023, ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் சுசுகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கசார் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய அல்கசார் மாடலின் டர்போ பெட்ரோல் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதே என்ஜின் அல்கசார் மாடலின் நான்கு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. புதிய அல்கசார் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பழைய 2.0 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது.

     

    புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ற வகையில் E20 எரிபொருளில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் புதிய வெர்னா மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட உள்ளது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது.

    அல்கசார் மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பத்தை ஸ்டாண்டர்டு அம்சமாக கொண்டுள்ளன. இத்துடன் இந்த காரில் புதிய முன்புற கிரில், ரிவைஸ்டு லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    • புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் முன்பதிவு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த காரின் உற்பத்தி சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி புதிய ஹூண்டாய் வெர்னா விலை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதே நாளில் இந்த காரின் சர்வதேச வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் சில விற்பனையாளர்கள் ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு மற்றும் வினியோக விவரங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

     

    கடந்த மாத துவக்கத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. புதிய மாடல் அறிமுகமாவதை ஒட்டி, ஏற்கனவே தற்போதைய வெர்னா மாடலை முன்பதிவு செய்தவர்கள் புதிய மாடல் வாங்க முன்பதிவை மாற்றி உள்ளனர்.

    விலை விவரங்கள் மார்ச் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய வெர்னா மாடலின் வினியோகம் ஒவ்வொரு வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப ஏப்ரல் மாத மத்தியில் துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் டிசைன்கள் சமீபத்தில் வெளியாகின.
    • அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய வெர்னா மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் மற்றும் ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய வெர்னா மாடலின் டிசைன் படங்கள் வெளியிடப்பட்டன.

    இதுதவிர 2023 ஹூண்டாய் வெர்னா புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன்படி புதிய கார் ரிடிசைன் செய்யப்பட்ட வெளிப்புறம், ஸ்போர்டினஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலாண்ட்ரா மற்றும் இதர ஹூண்டாய் செடான் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

     

    காரின் முன்புறம் அகலமான கிரில், பிளாக் இன்சர்ட்கள், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், செங்குத்தான எல்இடி ஃபாக் லேம்ப்கள் உள்ளன. ரிடிசைன் செய்யப்பட்ட காரின் பொனெட்டின் கீழ் நீளம் முழுக்க எல்இடி லைட்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், க்ரம் விண்டோ, பாடி நிறத்தால் ஆன டோர் ஹேண்டில்கள் உள்ளன.

    பிளாக் ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் விண்ட்ஷீல்டு, கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்கிட் பிளேட், வெர்னாவுக்கு மாற்றாக அக்செண்ட் எழுத்துகள் இடம்பெறுகின்றன. காரின் உள்புறம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், பவர்டு இருக்கைகள், ஆறு ஏர்பேக், புதிய லேயர் டேஷ்போர்டு, செண்டர் கன்சோல், ADAS போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் புதிய மாடலில் நிறுத்தப்படுகிறது. மேலும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது.

    Source: GaadiWaadi | Naver.com 

    ×