search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் அல்கசார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    ஹூண்டாய் அல்கசார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கசார் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய அல்கசார் மாடலின் டர்போ பெட்ரோல் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதே என்ஜின் அல்கசார் மாடலின் நான்கு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. புதிய அல்கசார் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பழைய 2.0 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது.

    புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ற வகையில் E20 எரிபொருளில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் புதிய வெர்னா மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட உள்ளது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது.

    அல்கசார் மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பத்தை ஸ்டாண்டர்டு அம்சமாக கொண்டுள்ளன. இத்துடன் இந்த காரில் புதிய முன்புற கிரில், ரிவைஸ்டு லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×