search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    கார் ஓரளவுக்கு தெரியுது.. எக்ஸ்டர் மாடலின் அசத்தல் டீசர் வெளியிட்ட ஹூண்டாய்!
    X

    கார் ஓரளவுக்கு தெரியுது.. எக்ஸ்டர் மாடலின் அசத்தல் டீசர் வெளியிட்ட ஹூண்டாய்!

    • புதிய எக்ஸ்டர் மாடலின் உற்பத்தி 2023 ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.
    • புதிய எக்ஸ்டர் மாடல் வித்தியாசமான முன்புறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்வதை கடந்த மாதம் சூசகமாக அறிவித்தது. இந்த வரிசையில், தற்போது புதிய எக்ஸ்டர் மாடல் வெளிப்புற தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் டீசரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய எக்ஸ்டர் மாடலின் உற்பத்தி 2023 ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.

    மேலும் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மாடலின் வெளியீடு நடைபெறலாம். இந்தியாவுக்காக உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைகளிலும் எக்ஸ்டர் மாடல் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் எவ்வித ஹூண்டாய் மாடல்களிலும் இல்லாத அளவுக்கு புதிய எக்ஸ்டர் மாடல் வித்தியாசமான முன்புறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    சென்சுவஸ் ஸ்போர்டினஸ் டிசைன் மொழியை தழுவி புதிய எக்ஸ்டர் மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், H வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. இதேபோன்ற டிசைன் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் மேலும் சில ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய எக்ஸ்டர் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த காரின் பின்புறம் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், லைட் பார், ஃபௌக்ஸ் கிளாடிங், விசேஷமான வீல் ஆர்ச்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அளவில் 3.8 மீட்டர் நீளமாக இருக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×