search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷவர்மா விற்பனை"

    • துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சிக்கன் ஷவர்மா, குழி மந்தி பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

    இவை முறையாக பின் பற்றப்படுகின்றனவா என கேரள மாநில சுகாதார குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. நேற்று 88 குழுவினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத 148 ஷவர்மா கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    • பர்கர் சாப்பிட்ட மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதே கடையில் ஷவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதித்த நிலையில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கடையில் பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    • ஷவர்மா சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

    திருவள்ளூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில், 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 'ஷவர்மா' சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார துறையினர் திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

    ஜெ.என்.சாலை, சி.வி. நாயுடு சாலை உள்ளிட்ட 'ஷவர்மா' கடையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு கடைக்கு நகராட்சியின் அனுமதி பெறவில்லை என்று கூறி சீல் வைத்தனர். மேலும் மூன்று கடைகளுக்கு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கடையில் உள்ள இறைச்சியினை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் சோதனை செய்ததில் அதில் அளவுக்கு மீறி கலர் சேர்த்தும், ஏற்கனவே வேக வைக்கப்பட்ட இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்ததும் கடையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 3 கடைகளுக்கும் 'நோட்டீஸ்' அளித்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பாஸ்ட் புட் உணவகம், 'ஷவர்மா' கடைகளில் சோதனை நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 55 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஷவர்மா மற்றும் அசைவ உணவகங்களில் நடத்திய திடீர் சோதனையில் 28 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் கெட்டுப்போன உணவு வகைகளை பறிமுதல் செய்தனர். 23 உணவகங்களில் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. 3 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டல்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி தரமற்ற இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

    இதற்கிடையே நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் பூங்கா நகரை சேர்ந்த சஞ்சய் (18 )உள்பட 8 பேர் பர்க்கர் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் 7 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். சஞ்சய் மட்டும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது பெற்றோர் கதறியபடி உள்ளனர்.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடையில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் நாமக்கல் நகர பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    • உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் வருத்தம் அடைய செய்கிறது என்றார்.

    நாமக்கல்லில் சவர்மா சாட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், துறை ரீதியாக விளக்கம் கேட்டு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கும், மாவட்ட நியமன அலுவலருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

    உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகையில், " கடந்த 17ம் தேதி உணவு பாதுகாப்பு குழு ஆய்வு செய்ததில், அந்த உணவகத்தில் 16ம் தேதி இரவு 200 பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்.

    உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எனது உத்தரவுபடி ஆகஸ்டு 28ம் தேதி தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 280 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    இப்படி பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் வருத்தம் அடைய செய்கிறது" என்றார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
    • உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    ×