search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு முகாம்"

    • காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும்.
    • இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் சார்பில் குமரன் கல்லூரியில் நாளை 4-ந்தேதி மெகா வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும் முகாமில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி., மற்றும் பிற துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள, 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

    முகாமில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளுக்காக, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி பஸ் இலவசமாக இயக்கப்பட உள்ளது.மேலும், விவரங்களுக்கு கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர்கள் 9942878094, 9790201617 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கல்லூரி முதல்வர் வசந்தி தெரிவித்தார்.

    • சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம்.
    • பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது

    திருப்பூர் : 

    திருப்பூர் பல்லடம் சாலையில்உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 30-க்கும்மேற்ப ட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களைதேர்வு செய்ய உள்ளனர். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள்வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம்.வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள்வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவுசெய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைபட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சிபெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் வேலைநாடுபவ ர்களும் வேலையளி ப்போரும்https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்துபுது ப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ண ப்பம் பெற்றுஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால்த ங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152-9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், மாதத்தின் மூனறாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரத்துடன் கலந்து கொண்டு, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.
    • தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாராட்டினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்த மாணவர்க ளுக்கு கெட்ஸ்டெர் சாப்ட்வேர் என்ற தனியார் நிறுவனம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.

    தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாரட்டினார்.

    மேலும்,கல்லூரியின் மின்னியல் துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பாலாஜி பிரகாஷ் மற்றும் துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், திவாகர் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
    • பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    தருமபுரி,

    தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்து றையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் "தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்" ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும்.

    இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறை களில் வேலையளிப்பவர் கோரும் பட்சத்தில், உரிய விதிகளின்படி நேர்முகத்தேர்விற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸி க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்க வுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 19.5.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடை பெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • வருகிற 19-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு அரசு. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 19-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.

    இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
    • இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

    இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் பணிவாய்ப்பு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. வாகன ஓட்டுனருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி.நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகளை 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடைபெறுகிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்வி தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர்(எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.1.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற

    28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய தென்காசி மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டதன்படி அனைவரும் இதனை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவ ர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    தருமபுரி,

    தனியார்துறை நிறுவன ங்களும், தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்து கொள்ளும் "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்" ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவ ர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பி ன்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்.

    இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு. விற்பனை யாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூ ட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற நாளை 21-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறு மாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.

    • தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.
    • 100-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அலுவலக வளாகத்திலேயே நடைபெறும் இந்த முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நாளை வேலைவாய்பு முகாம். கருணாநிதி பிறந்தநாளையொட்டி செம்பியத்தில் திரைப்பட இயக்குனர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி.
    ×