search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டூர்ணிமடம்"

    • மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளிவிளை கிங் மேக்கர் தெருவில் பயன்படாத குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்தது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிவிளை கிங் மேக்கர் தெருவில் பயன்படாத குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி னார்கள். இதேபோல் மேலும் 2 இடங்களில் பயன் படாத குடிநீர் தொட்டிகள் பொதுமக்களுக்கு இடை யூறாக இருந்தது தெரிய வந்தது. அந்த குடிநீர் தொட்டி களையும் அகற்ற மேயர் மகேஷ் உத்தர விட்டுள்ளார். குறுந்தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது கழிவுநீர் ஓடையில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அந்த ஓடையை உடனடியாக சுத்தம் செய்ய மேயர் உத்தரவிட்டார்.

    ராஜூ நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின் போது உதவி பொறியாளர் ராஜாசீலி, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர்கள் அனுஷா, பிரைட், மேரி ஜெனட் விஜிலா ஆகியோர் உடனிருந்தனர்.

    இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட சக்தி கார்டன், வாட்டர் லைன் தெருவில் ரூ.17 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் ஸ்ரீலிஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மினி டெம்போ மோதியது
    • விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கட்டையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் (வயது 38).

    இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தார். இரவு அவர் வடசேரியில் இருந்து வெட்டூர்ணிமடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பள்ளிவிளை பகுதியில் வந்து கொண்டிருந்த போது வெட்டூர்ணிமடத்திலிருந்து வடசேரி நோக்கி வந்த மினி டெம்போ மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் எட்வர்ட் தூக்கி வீசப்பட்டார்.

    தலை உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த எட்வர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மினி டெம்போ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலியான எட்வர்ட் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    நாகர்கோவில்:

    வெட்டூர்ணிமடத்தில் உள்ள காமராஜர் சிலை மறுசீரமைப்பு பணியை முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது சொந்த நிதியில் மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளான இன்று மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகே சன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகளை அவர் நட்டார். ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை யும் நாஞ்சில் முருகேசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சந்திரன், ராஜேந்திரன், சிவலிங்கம், கோபால், சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    கழிவு நீர் ஓடைக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.வெட்டூர்ணிமடம் பகுதியில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×