search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் சிலை"

    • ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.
    • சிலையை பராமரித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் பெயரில் அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வரவு வைக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தாலும், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீண்டகாலமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணியால் பாதிக்கப்படும் கட்டட உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க ப்பட்டுவந்த நிலையில், காமராஜர் சிலையும் அகற்றப்பட வேண்டிய நிலையில் இருந்ததால், சிலையை பராமரித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு, சிலையை பராமரிப்பு பணி செய்து வந்ததற்காக அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வரவு வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, தனிநபர் பெயரில் தொகை வரவு வைக்கப்பட்டது, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மற்றும் புதிய சிலை அமைப்புக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு, சிலையை பராமரிப்பு செய்து வந்ததற்காக வழங்கப்பட்ட அந்தத் தொகையை, புதிதாக சிலை அமைப்பதற்காக, சிலை அமைப்புக் குழுவிடம் வழங்க தான் உரிய ஏற்பாடு செய்வதாக அறிவித்தார்.

    இதையடுத்து அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வில்லியம் தாமஸ் ஆகியோர் முன்னிலையில் அருமைநாயகம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526-க்கான தனது வங்கி காசோலையை, சிலை அமைப்புக் குழுவைச் சேர்ந்த ஜாண்ரவி, பர்வீன்.அலெக்ஸ் ராஜா, உள்ளி ட்டோரிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் அருணாசலம், காங்கிரஸ் நிர்வாகி அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன.
    • அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தராபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பெயரை அலங்கார வளைவிற்கு வைப்பதும், வளாகத்தில் அவரது உருவ சிலை வைப்பதும் மட்டுமே மிகப்பொருத்தமாக இருக்கும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன. அது மட்டுமில்லாது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த மிக முக்கியமான கோரிக்கையை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    நாகர்கோவில்:

    வெட்டூர்ணிமடத்தில் உள்ள காமராஜர் சிலை மறுசீரமைப்பு பணியை முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது சொந்த நிதியில் மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளான இன்று மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகே சன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகளை அவர் நட்டார். ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை யும் நாஞ்சில் முருகேசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சந்திரன், ராஜேந்திரன், சிவலிங்கம், கோபால், சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • சிம்மக்கல்நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி.ராமையா தலைமை தாங்கினார்.

    மதுரை

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதன்படி காலை 10 மணிக்கு மதுரை சிம்மக்கல் தமிழ்சங்கம் ரோட்டில் இருந்து தொடங்கி விளக்குத்தூண் காமராஜர் சிலையை ஊர்வலம் வந்தடைந்தது.

    நிகழ்ச்சிக்கு சிம்மக்கல்நாடார் உறவின்முறை பொதுச்செய லாளர் ஆர்.வி.டி.ராமையா தலைமை தாங்கினார். ஓம் சேர்மபிரபு, ேஜாசப் வாசுதேவன், பெருந்தலை வர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், கணேசன், ராஜசேகர், மதன், வணிகர் பேரைமைப்பு மாவட்ட துணை தலை வர் பாண்டியன், ஜான் கிறிஸ்டோபர், காமராஜ், கார்த்திக், தமிழ்நாடு நாடார் பேரவை தாைழக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிம்மக்கல்நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வன்னியராஜன், துணை செயலாளர் செல்வராஜன், துணைத்தலைவர்கள் செல்வமோகன், தங்கையா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

    பி.டி.ஆர். குழுமங்களின் சேர்மன் நிர்வாக இயக்குநர் தானியல் தங்கராஜ், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராஜா, குமரி கன்சல்டன்சி அப்பாசுவாமி, பெனிட் அன்ட் கோ பெனிட்கரன், கே.ஏ.எஸ்.சேகர் டிரஸ்ட் ராணி அருள் மார்ட்டின், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், அ.இ.நா.இ. பேரவை பொதுச்செயலாளர் பால்பாண்டி, கூடல்நகர் அரிசி டிப்போ பால முருகன், கே.ஆர். மெட்டல் செல்வராஜ், கே.ஆர்.மெட்டல் ராஜவேல், அ.இ.நா.இ.பேரவை அறிவுச்சுடர் காமராஜ், மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் அகஸ்டின், பெரியசாமி, கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    நாடார் மகாஜன சங்க தவைலர் முத்துசாமி, நாடார்கள் முன்னேற்ற சங்க செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் ஆகியோர் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் வெற்றி ராஜன், வில்லாபுரம் உற வின்முறை துணைத்தலை வர் மாயாண்டி, மதி வாணன், பாஸ்கரன், சஞ்சீவி மலையான், அருஞ்சுனை, சத்தியமூர்த்தி, ஜோதிபாசு, வேல்முருகன், பவுன்ராஜ், சங்கையா, வேல்முருகன், யோவான், ராதாகிருஷ்ணன், ராம்குமார், அய்யனார், உலகநாதன், பூவராகவன், வெற்றிக்குமார், ஆலங்குளம் நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள், ஆலங்குளம் மேலக்கால், கரும்பாலை, தெற்குவாசல், கோச்சடை பகுதி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பி னர்கள் உள்பட ஆயி ரக்க ணக்கா னோர் கலந்து கொ ண்டனர்.

    முடிவில் சிம்மக்கல் நாடார் உற வின்முறை துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறினார்.

    • கருங்கலில் இன்று பரபரப்பு
    • போலீசார் சமரச பேச்சு

    கன்னியாகுமரி:

    கருங்கலில் இருந்து தக்கலை செல்லும் சாலை சந்திப்பில் காமராஜர் சிலை உள்ளது. இதனை காங்கிரசார் அமைத்து பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் மற்றும் விசேச நாட்களில் காங்கிரசார் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    காமராஜரின் 120-வது பிறந்த நாளையொட்டி இன்று காலை 9 மணியளவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய்,மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

    அதனையொட்டி சிலையை சுற்றி காங்கிரஸ் கொடிகள் கட்டப் பட்டிருந்தன. அப்போது மறுபுறம் நாம் தமிழர் கட்சியினர் கிள்ளியூர் தொகுதி செயலாளர் ஜாண் ஜெபராஜ் தலைமையில் கொடிகளுடன் திரண்டனர்.

    இரண்டு கட்சியினரும் ஒரே நேரத்தில் காமராஜர் சிலைக்கு மாலையிட வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்திரவிளை காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் கருங்கல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, வேறு எவரும் மாலையிட முடியாத வகையில் அதனை பூட்டிவிட்டு சிலை முன் நின்று கொண்டிருந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியினர் சிலைக்கு மாலைபோட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இருதரப்பினரிடமும் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் நாம் தமிழர் கட்சியினர் சிலையை சுற்றி கொடிகள் கட்டாமல் ஒரே ஒரு கொடியுடன் வந்து மாலையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்பின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒரு கொடியுடன் வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் கருங்கல் பகுதியில் சிறிது நேரம் பரபப்பு நிலவியது.

    ×