search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிமருந்து பறிமுதல்"

    • ரமேஷ் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சமீப காலமாக உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து ஏற்காடு பில்லேரி கிராமத்தில் உள்ள ரமேஷ் (வயது 38), விவசாயியான இவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில் சோதனை செய்தனர்.

    அப்போது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்கள் 100 கிராமையும், ஈயக்குண்டுகள் 350 கிராம், சிறிய ஈய குண்டுகள் 100 கிராம் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஏற்காட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்களை சந்தித்து வருகிற 30-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வாழப்பாடி டி.எஸ்.பி. கூறி உள்ளார்.

    • அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
    • வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் பட்டாசு வெடித்து ஒருவர் பலியானார்.

    இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த பட்டறை பள்ளத்தெருவில் உள்ள வீட்டில் உரிமம் இன்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், வருவாய் துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பட்டறைபள்ளத் தெருவைச் சேர்ந்த சுகுமார்(41) என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தது தெரிந்தது. கோவில் திருவிழாவிற்காக அவர் பட்டாசு தயாரித்ததாக கூறி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.

    வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.

    • நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பெரியேரிக்காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி தையல் நாயகி தலைமையிலான போலீசார், ஏற்காடு பெரியேரிக்காடு கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர். இதில், 2 நாட்டு துப்பாக்கி மற்றும் 2 கிலோ வெடிமருந்து, 3 கிலோ ஈயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விவசாயி சுந்தரராஜன், காட்டுப்பன்றி மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.

    ×