search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடி விபத்து"

    • சிவகாசி பட்டாசு கடையில் நடந்த விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியும், வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சிவகாசியில் ரெங்கபாளையம் பட்டாசு கடையில் நேற்று நடந்த விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்

    இந்நிலையில், சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் சுந்தர மூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம்குமார் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து.
    • வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து என தகவல்.

    விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து நடந்த அறைக்குள் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என சோதனை செய்து வருகி்ன்றனர்.

    மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரும் விரைந்துள்ளனர்.

    இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் இன்று நன்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
    • வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    அப்போது, அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறவித்துள்ளார்.

    அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோரை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு கடை தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
    • இச்சம்பவத்திற்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து மளமளவென நாலாபுறமும் பரவியது. இதனை கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், பட்டாசு கடை வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர்கள்.

    இச்சம்பவத்திற்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தீ விபத்து நடந்த பகுதிக்கு கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அதிகாரிகளைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கும் என அறிவித்தார்.

    இதன்படி, பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே, பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
    • வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் உள்ளே சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

    சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 13 பேர் சம்பவ இடத்திலும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர்.
    • 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    மேலும், 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    மூன்று தசாப்த கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர் அஜர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக மீட்பதற்காக கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பிறகு, நாகோர்னோ-கராபாக்கின் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்மீனியாவிற்கு இப்பகுதியை விட்டு வெளியேறினர்.

    அப்போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த ராசு மகன் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் அங்குள்ள தோட்டத்தில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து அதனை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் தீ பிடித்தது. இதில் ராஜா மற்றும் கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 2 பேர் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆலையை நடத்தி வந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • படுகாயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • வெடி விபத்து தொடர்பாக வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சுந்தரபுரியில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் பாறை உடைக்க வைத்த வெடி, வெடித்து விபத்துக்குள்ளானது.

    இந்த வெடி விபத்தில், அரசம்பட்டியைச் சேர்ந்த நாராயணன், சுந்தரபரியை சேர்ந்த வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம், ஹாவேரியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர்.

    அங்கு தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான்கு பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • இரண்டாவது வெடிவிபத்தில் 26 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

    ரூமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் உள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இரண்டு வெடி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

    எரிவாயு நிலையத்தில் முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்குப் பிறகு, தீ இரண்டு தொட்டிகள் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியது.

    இதனால் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இதனால் சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டதாக அவசரகால சூழ்நிலைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மற்றும் 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக ஐஜிஎஸ்யு தெரிவித்துள்ளது. நான்கு பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நேற்று மாலை எல்பிஜி நிலையத்தில் ஏற்பட்ட இரண்டாவது வெடிவிபத்தில் 26 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

    மேலும், தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என்றும், அந்த இடத்தில் மூன்றாவது தொட்டி ஆபத்தை ஏற்படுத்தியதால் மேலும் வெடிப்புகள் நிகழலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

    • ரஷியாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • இந்த பயங்கர வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தெற்கு பகுதியில் தாகெஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்து 12 பேர் உயிரிழந்ததனர் என்றும், 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து எரிவாயு நிலையத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது.

    • வெடிவிபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியது.

    ரஷியாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சியின்படி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியதாக கூறப்பட்டது.

    மேலும், ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், "ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டியது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது. மேலும், சம்பவ இடத்தில் 260 தீயணைப்பு வீரர்கள் இருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

    ×