search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பிக்கலாம்"

    • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவ டிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விரு திற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்பு களுடன் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தனிதிறன் போட்டிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறை, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த, படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், தொழிற்துறை பணியாளர்கள், தகுதி வாய்ந்த தனிநபர்கள் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் மாணவ, மாண விகள், இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் 2024-ம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவி லான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் naanmudhalvan.tn.gov.in>tnskills> என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக் கலாம். மேலும் விவரங்களை tnskills; naanmudhalvan.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி விடுதிகள் திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் கல்லூரி மாணவர்களுக்காக 4 விடுதிகளும், மாணவிகளுக்காக 3 விடுதிகளும் என மொத்தம் 7 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    2023-2024-ம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி படிப்பதற்கு இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https/tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளரின் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.

    மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் சேர இணையதளத்தில் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட தருமபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தினை அணுகலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.(3)) துறை, நாள்.14.06.2018-ல் வெளியிடப்பட்டன.

    இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலையில் 14.06.2018 முதல் 13.09.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி Writ மேல்முறையீட்டு மனுக்கள் எண். 233/2019 மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.02.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது.

    தற்பொழுது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட தருமபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தினை அணுகலாம்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் (https://tcp.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இன்னும் ஒருவார காலம் மட்டுமே உள்ள நிலையில் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவ டிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்பு களுடன் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவ டிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

    மேற்காணும் விரு திற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்பு களுடன் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவல கத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ், 7 கல்லூரி விடுதிகள்

    (3 மாணவர்கள் விடுதிகள், 4 மாணவிகள் விடுதிகள்) செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயனடையலாம்.

    இதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டிற்கும் கல்லூரிக்கும் உள்ள தூரம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

    (பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூரில் பணி புரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீத மும், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.

    மாணவ- மாணவி களுக்கு விடுதிகளில்3 வேளைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கு தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல். சாதிச்சான்று, வருமான சான்று, பள்ளி மாற்று சான்று, நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலையத்தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 30-ந் தேதி வரை ஒப்படைத்து விட்டு https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    • விண்ணப்பதாரர்கள் வருகிற 30ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்
    • கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க விருப்ப முள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 540 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கம், இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயப்படுத்தலாம்.

    விண்ணப்பதாரர்கள் வருகிற 30ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.

    விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச் சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    மேலும், அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்தி காணலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • சுய தியாகம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்தவா்களுக்கு மத்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.
    • ஜூன் 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் அசோக சக்ரா விருதுக்கு தகுதியான நபா்கள் வரும் ஜூன் 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இயற்கை சீற்றம், தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளை, தீவிரவாத ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து தனிப்பட்ட முறையில் பொதுமக்களை காப்பாற்றி வெளிப்படையான துணிச்சல், சுய தியாகம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்தவா்களுக்கு சுதந்திர தின விழாவின்போது மத்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பு பணியாளா்களை தவிர அனைத்து தரப்பு குடிமக்கள், காவல் படை, மத்திய ஆயுத படை, ரயில்வே பாதுகாப்பு படைகளைச் சோ்ந்தவா்களும் இந்த விருதுக்கு தகுதியானவா்கள். ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் அசோக சக்ரா விருதுக்கு தகுதிவாய்ந்த நபா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று வரும் ஜூன் 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று முற்பகல் 11.30 மணிக்கு பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 ஒப்படைக்கவேண்டும் .

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டத்தில் நிதிமோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் , திருப்பூர் தனியார் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நிலம் ஏலம், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காங்கேயம் வட்டம் நெழலி கிராமத்தில் உள்ள நிலம் ஏலம்விடப்பட உள்ளது.

    மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர், ஏலநிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,சார் ஆட்சியர் அலுவலகம் ,திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை5 மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்டவருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 26-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதியதாக தோற்று விக்கப்பட்ட ராணி ப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.

    தற்போது ராணி ப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்ப ட்டோருக்கான இல்லம் அமைத்திட விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த விண்ணப்பத்தை ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தொலைபேசி எண்: 04172-274177 என்ற முகவரியில் வருகிற 26-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
    • .விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    தமிழக அரசு 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள அவகாசம் வழங்கியது. விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டுமனை வரன்முறை செய்யப்படுகிறது. இருப்பினும் கிராமப்புறத்தில் உள்ள வீட்டுமனைகளைவரன்முறை செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. மனை உரிமையாளர்கள் எவ்வித அங்கீகாரம் செய்வது குறித்து விழிப்புணர்வு இல்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் நகரையொட்டியுள்ள ஊராட்சிகளில் வீட்டுமனை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இதனால் சற்று தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு வீட்டுமனை வாங்கினர்.கடந்த 2016க்கு பின் அங்கீகாரம் பெற்ற மனைகள் மட்டுமே விற்கப்படுகிறது. முறையான அங்கீகாரம் பெறாமல் இருக்கும் மனைகளை, மனை உரிமையாளர்கள் வரன்முறை செய்து கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    வீட்டுமனை உரிமையாளர், மனை ஒன்றுக்கு பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். வளர்ச்சி கட்டணமாக சதுர மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசுக்கு சேர வேண்டிய வரன்முறை கட்டணமாக சதுர மீட்டருக்கு, 45 ரூபாய் வீதம் கணக்கிட்டுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

    இதுகுறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அங்கீகாரமற்ற வீட்டுமனையை வரன்முறை செய்துகொள்ளலாம். ஊராட்சிகளில் அதற்கான சலான்களை பெற்றுபூர்த்தி செய்து அந்தந்த வங்கிகளில் செலுத்த வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு நடைமுறைகள் எளிதாக மாற்றப்பட்டுள்ளன. மனை உரிமையாளர்இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×