search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயதசமி"

    • சோழவந்தானில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • திரவுபதி அம்மன் கோவிலில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி 4 ரத வீதியும் வந்து வைகை ஆற்றுக்குச் சென்று அம்பு எய்தல் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் சோழவந்தான் பகுதி யில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வைகைஆற்றுக்கு சென்று அம்புஎய்தல் விழா நடைபெற்றது. அதன்படி சோழவந்தான் நாடார்உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளி யம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடைபெற்றது. இதில் அண்ணாமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரவுபதி அம்மன் கோவி லில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி 4 ரத வீதியும் வந்து வைகை ஆற்றுக்குச் சென்று அம்பு எய்தல் நடந்தது. பரம்பரை அறங்காவ லர்கள் அர்ச்சு னன், திருப்பதி, ஜவகர் லால்,குப்புசாமி உட்பட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.இதை முன்னிட்டு சன்மார்க்க சங்கத்தின் துணைத்தலைவர் கருப்பு சாமி தினசரி சொற்பொழிவு நடத்தினார்.

    ஜெனகைமாரியம்மன்கோவிலில்அம்மன்புறப்பட்டு வைகைஆற்றுக்குச்சென்று அம்புஎய்தல் விழா நடை பெற்றது.செயல் அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முக வேல் கோவில் பணியா ளர்கள் பூபதி கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சுவாமி சப்பரத்தில் புறப்பட்டு வைகைஆற்றுசென்று அம்பு எய்தல் விழா நடைபெற்றது.செயல் அலுவலர் சுதாமற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பேட்டை வீரகாளியம்மன் கோவிலில் அம்மன் வீதிஉலா நடந்து.வைகைஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் விழா நடை பெற்றது. விழா ஏற்பாடு களை பேட்டைக்கு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நெல், அரிசியில் ‘அ’ எழுதி சேர்த்தனர்
    • பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக, பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.

    விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை.

    குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    இன்று விஜயதசமியை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வித்யாரம்பம் நடைபெற்றது. பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைக்கு முதன் முதலாக எழுத கற்றுக் கொடுத்து, பள்ளியிலேயே சேர்த்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 510 அரசு தொடக்கப்பள்ளி, 151 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 118 அரசு உதவி பெறும், தனியார் தொடக்கப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது.

    குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து நெல், அரிசி போன்றவற்றில் 'அ' எழுத வைத்து பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது.

    அரசு தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் கொண்டு வந்து சேர்த்தனர்.

    • கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம்.
    • என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.

    திருப்பூர் :

    நவராத்திரி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையட்டி பொதுமக்கள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம். இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. காலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.

    திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதினர். அதுபோல் அரிசியிலும் எழுத வைத்து எழுத்து அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். தொடர்ந்து 9வது ஆண்டாக 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதே போன்று திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், ஈஸ்வன் கோவில், வாலிப்பளையம் முருகன் கோவல், மற்றும் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.

    ×