search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி"

    இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. #IncomeTax
    புதுடெல்லி :

    வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, கடந்த  ஜூலை 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

    இதில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3.17 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5.42 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #IncomeTax
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #ITReturn
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மாத சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்த தகுதி உடையோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அதாவது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

    வருமான வரியை ஒழித்துக் கட்டுவதன் மூலம் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும் என்று பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். #SubramanianSwamy #IncomeTax
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி பேசுகையில், நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கும், சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் சதவீதம் மிக மிகக் குறைவாகும். இந்த சிறிய சதவீதத்துக்காக மக்கள் மீது வருமான வரி என்னும் சுமையை ஏன் சுமக்க வேண்டும்?... எனவே வருமான வரியை ஒழித்துக் கட்ட வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும். இதனால் முதலீடுகள் பெருகி நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையைவிட மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.

    மேலும் இயற்கை வளங்கள் மற்றும் அலைக்கற்றை ஆகியவற்றை ஏலம் விடுதல் முறைக்கு கொண்டு வருவதன் மூலம் நிதி ஆதாரமும் நிறைய கிடைக்கும் என்றார்.

    2G, 3G, 4G, 5G என வரிசையாக காத்திருக்கும் அலைக்கற்றையை ஏலம்விடலாம், நிலக்கரி சுரங்கத்தையும் ஏலம் விடலாம் என பேசிஉள்ளார். ஏழ்மை மற்றும் வேலையிண்மை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால், 10 வருடங்களுக்கு நம்முடைய வளர்ச்சி  10 சதவிதமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். #SubramanianSwamy #IncomeTax
    ×