search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி மேலாளர் தற்கொலை"

    • நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஸ்வப்ன பிரியாவின் தாய் தனது மகள் மீது போலீசில் புகார் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் துணை மேலாளராக ஸ்வ்ப்ன பிரியா என்பவர் வேலை செய்து வந்தார்.

    இந்த வங்கியில் சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சில வாடிக்கையாளர்கள் நகை கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்தி நகையை கேட்டனர்.

    அப்போது வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. சுமார் 2400 பேர் அடகு வைத்த நகைகள் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ. 4½ கோடி என கூறப்படுகிறது.

    இந்த தகவல் காட்டுத்தீயாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரவியது.

    நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி துணை மேலாளர் ஸ்வப்ன பிரியா விடுமுறையில் சென்றார்.

    வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மண்டல மேலாளர் ராஜு போலீசில் புகார் செய்தார். வங்கியில் அடகு வைத்த நகைகள் காணாமல் போனதற்கு வங்கி ஊழியர்கள் 6 பேர் காரணம் என கூறப்படுகிறது.

    போலீசில் புகார் செய்யப்பட்டதால் துணை மேலாளர் ஸ்வப்ன பிரியா விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து ஸ்வப்ன பிரியாவின் தாய் தனது மகள் மீது போலீசில் புகார் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.

    வங்கியில் காணாமல் போன நகைகள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பிறகு வாடிக்கையாளர்களின் நகைகள் திருப்பித் தரப்படும் என மண்டல மேலாளர் ராஜு தெரிவித்தார்.

    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பெங்களூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சிவகிரி கிரண் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சிவகிரி கிரண் தூக்கில் பிணமாக தொங்கியுளளார்

    இதனை பார்த்த அவர்கள், நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஹைதராபாத்தில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் பெங்களூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நாமக்கல் விரைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் முருகேசன் திடீரென ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவர் விடுமுறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவி, மகள் பள்ளிக்கு சென்ற பின்னர் முருகேசன் தனது தாயாரிடம் மாடிக்கு செல்வதாக கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை ஆயுதப்படை வளாகம் செயின்ட் பால்ஸ் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் முருகேசன் (வயது 52).

    இவர் மூலக்கரைப்பட்டியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    மாரியம்மாள் மூன்றடைப்பில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகேசன் திடீரென ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவர் விடுமுறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவி, மகள் பள்ளிக்கு சென்ற பின்னர் முருகேசன் தனது தாயாரிடம் மாடிக்கு செல்வதாக கூறியுள்ளார்.

    ஆனால் வெகுநேரமாக கீழே இறங்கி வராததால் முருகேசனின் தாயார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் முருகேசன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திடீரென முதுகுளத்தூருக்கு இடமாற்றம் செய்ததால் முருகேசன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×