நாமக்கல்லில் தனியார் வங்கி மேலாளர் தற்கொலை

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்லில் தனியார் வங்கி மேலாளர் தற்கொலை
Published on

நாமக்கல்:

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சிவகிரி கிரண் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சிவகிரி கிரண் தூக்கில் பிணமாக தொங்கியுளளார்

இதனை பார்த்த அவர்கள், நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஹைதராபாத்தில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் பெங்களூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நாமக்கல் விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com