search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெங்கநாதர் கோவில்"

    • அடியார்கள் பெருமாள் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
    • கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    கி.பி. 1,311-ம் ஆண்டில் டெல்லியை ஆட்சி செய்து வந்த மாற்று மதத்தினர் இந்தியா முழுவதும் படையெடுத்து கோவில்களை தாக்குவது, பொக்கிஷங்களை கொள்ளையடிப்பது, சிற்பங்களை சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், கி.பி. 1,323-ம் ஆண்டு டெல்லியை ஆட்சி செய்த மாற்று மதத்தினர் ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து வந்தனர்.

    அப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆச்சாரியர்கள், அடியார்கள் ஸ்ரீரங்கம் கோவிலையும், கோவில் சொத்துகளையும் பாதுகாக்க முடிவு செய்தனர். அப்போது ஸ்ரீரங்கத்தில் பிள்ளை லோகாச்சாரியார் என்ற வைணவ அடியார் மூலவர் ரெங்கநாத பெருமாள், ரெங்கநாயகி தாயாரை சுவர் எழுப்பி மறைத்தார்.

    மேலும் உற்சவமூர்த்தியான அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி சிலரின் துணையுடன் காவிரி ஆற்றின் வழியாக தெற்கு நோக்கி அழகர் கோவில், கோழிக்கோடு, திருநாராயணபுரம், திருப்பதி, கர்நாடகா என ஊர் ஊராக சுற்றி ஆங்காங்கே அழகிய மணவாளனுக்கு பூஜைகள் செய்து வந்தனர். ஸ்ரீரங்கத்தில் மாற்று மதத்தினர் அச்சம் நீங்கிய நிலையில் அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் கழித்து வைகாசி 17-ம் நாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அவர்தான் நம்பெருமாள் எனக்கூறி அனைவரும் வழிபாடு செய்தனர்.

    அழகிய மணவாளன் நம்பெருமாளாக ஸ்ரீரங்கம் திரும்பி வந்த இந்த நாளை (வைகாசி 17-ம் நாள்) கொண்டாடும் வகையில் திருக்கோவில் திருமடங்கள் சார்பில் ஸ்ரீரங்கம் பெரிய நம்பிகள் மற்றும் ஆச்சாரியார்கள் தலைமையில் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான அரங்கன் அடியார்கள் பெருமாள் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    • இந்த உற்சவம் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவத்தின் 9 நாட்களும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைந்தார். வசந்த உற்சவத்தின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாளன்று நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    மேலும் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுகிறார். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த உற்சவம் வரும் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    • 9 நாட்களும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த உற்சவம் வரும் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருவார்.

    அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுவார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்த உற்சவ திருவிழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாளன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 500 பக்தர்கள் மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
    • பக்தர்கள் தங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

    சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோவில்களான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகியவற்றில் ரூ.300 கட்டணத்தில் தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை 500 பக்தர்கள் மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

    இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை jceotry25700.hrce@tn.gov.in என்ற இ-மெயில் மூலமோ அல்லது இணை ஆணையர் அல்லது செயல் அலுவலர், ரெங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம் என்ற முகவரிக்கோ அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

    • இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தினமும் மாலை 4.45 மணி முதல் 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.

    பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    14-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 15- ந் தேதி முதல் 19-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது.

    15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இரவு 8.45 மணிமுதல் இரவு 9.45 மணிவரை வீணை ஏகாந்த சேவை நடைபெறும். வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.

    உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி பின் மாலை 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    உள்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.45 மணி முதல் 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது.
    • ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

    முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் கூகூ அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான். இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமான முனிவர் கந்தர்வனை முதலையாக சாபமிட்டார்.

    உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது விஷ்ணுவின் சக்ர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இதே போல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும் போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக சபித்தார். இதனால் அவர் கஜேந்திர யானையாக வாழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு, பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க போனபோது தடாகத்தில் இருந்த கூகூ முதலை கஜேந்திர யானையின் காலை கவ்விக்கொண்டு விட மறுத்தது. எவ்வளவோ முயன்றும் அந்த முதலை யானையின் காலை விடவில்லை. இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரெங்கா, ரெங்கா என்று கூவி தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது ஏறி அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் கூகூ முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான கஜேந்திரனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் ஆகும்.

    இந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும். இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.

    பின்னர் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றிற்கு சென்றார். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி 6.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். பின்னர் இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியின் போது அம்மாமண்டபத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இன்று 12 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
    • மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் கடந்த 25-ந்தேதி மாலை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. வெளிக்கோடை நாட்களில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலை புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து, புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    நம்பெருமாள் உள்கோடை திருநாள் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு மாலை 6.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு உள்கோடை மண்டபத்திற்கு இரவு 7.45 மணிக்கு சென்றடைந்தார். உள்கோடை மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் கோடை திருவிழா நிறைவு பெற்றது.

    சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) கஜேந்திர மோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடைவார். அங்கு நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.
    • சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார்.

    குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்று முதல் சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார்.

    இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை சேர்த்தி சேவை கண்டருளினார்.

    அர்ச்சுன மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    • இந்த விழா இன்று தொடங்கி 29-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • நம்பெருமாள் உள்கோடை திருநாள் 30-ந் தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேருவார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 30-ந் தேதி தொடங்கி மே மாதம் 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 30-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவை நடைபெறுகிறது. வெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி கிடையாது. வருகிற 29-ந் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.

    5-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
    • நாளை இரவு சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப் பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார்.

    காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.

    கீழச்சித்திரை வீதியில் இருந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின்னர் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள் ளது.

    நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து வருகிற 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்தார்.

    விழாவின் 4-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நண்பகல் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை (சனிக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×