search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்பப்பர்"

    உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பருக்கு மொராதாபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #LSPolls
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 21 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.

    இந்த 21 வேட்பாளர்களில் 16 பேர் உத்தரபிரதேசத்துக்கும் 5 பேர் மராட்டியத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சுசில்குமார் ஷிண்டே, ஸ்ரீபிரகாஷ், பிரியாதத், ராஜ்பப்பர் ஆகியோர் முக்கியமானவர்கள். சுசில்குமார் ஷிண்டேக்கு சோலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீபிரகாசுக்கு கான்பூர் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பிரியாதத்துக்கு மும்பை வடக்கு மத்திய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சுனில்தத் 5 முறை தேர்வான இந்த தொகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது மகள் பிரியாதத் வெற்றி பெற்று இருந்தார்.

    இதை கருத்தில் கொண்டு பிரியாதத்துக்கு அதே தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனவே இந்த தடவை வேறு தொகுதியில் அவரை களம் இறக்க ராகுல்காந்தி முடிவு செய்தார்.

    அதன்படி ராஜ்பப்பருக்கு மொராதாபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று இருந்தது. எனவே இந்த தொகுதியை ராஜ்பப்பருக்கு ராகுல்காந்தி வழங்கி உள்ளார்.

    காங்கிரஸ் சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 11 வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

    நேற்று 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காங்கிரஸ் கட்சி 38 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பிரபலமான மூத்த தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #LSPolls
    ×