search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கெட்"

    • இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
    • இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

    3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வருகிற 23-ந் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்ய இருந்தது.
    • என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேசன் நடத்தப்படுகிறது.

    நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டு உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

    இதன் முதற்கட்டமாக ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகே ஒரியன் விண்கலத்தை பறக்க வைக்க நாசா திட்டமிட்டு உள்ளது.

    ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ந் தேதி கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 3-ந் தேதி ராக்கெட்டை ஏவும் பணிகள் நடந்துவந்த நிலையில் எரிபொருள் கசிவு காரணமாக விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டதாக நாசா தெரிவித்தது.

    இதற்கிடையே ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வருகிற 23-ந் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்ய இருந்தது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராக்கெட் ஏவுதல் 3-வது முறையாக தாமதமாகி உள்ளது. வருகிற 23-ந் தேதி ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்றும் 27-ந் தேதியை இலக்காக கொண்டுள்ளோம் என்றும் நாசா அறிவித்துள்ளது.

    70 நிமிடங்களுக்குள் ராக்கெட் ஏவுதல் நடத் தப்பட வேண்டும் என்று நாசா கட்டுப்பாடு விதித்து உள்ளது.

    தற்போது என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேசன் நடத்தப்படுகிறது.

    • ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த

    இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது.

    ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவுகிறது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.

    ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது.
    • இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

    இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

    இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.

    பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். மேலும், இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×