search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலுதவி சிகிச்சை"

    • வனச்சரகர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்
    • காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. நேற்று வழி தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் திடீரென இவரது கிணற்றில் தவறி விழுந்தன.

    இதனை கண்ட சண்முகம் கிணற்றில் 2 மான்கள் தத்தளித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான வீரர்கள் தீயனைப்பு துறையினரின் உதவியுடன் மான்களை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    காயம் அடைந்திருந்த 2 புள்ளி மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து வனச்சரகர் இந்து உத்தரவின்பேரில் அருகே இருந்த கருத்தமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • மும்பையை சேர்ந்தவர்
    • முதலுதவி சிகிச்சை அளித்தார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் மும்பை ரயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் தனது சகோதரி களுடன் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் வந்து கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த சக பயணிகள் மற்றும் சகோதரிகள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மணி மற்றும் வின்சென்ட் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    மயங்கி விழுந்த பெண்ணின் நெஞ்சை அழுத்தியும், உறவினரை வாயில் ஊத சொல்லியும் முதலுதவி செய்தனர். அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரக் கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரித்த போது, மயங்கி விழுந்த பெண் மும்பையை சேர்ந்த மாலா (45) என்பது தெரியவந்தது.

    இவர் 2 சகோதரிகளுடன் அரக்கோணத்தில் இருக்கும் தனது அண்ணன் கோபால் என்பவரது வீட்டுக்கு வந்ததாகவும், மீண்டும் மும்பை செல்வதற்காக சகோதரரிகளுடன் ரெயில் நிலையம் வந்த போது இச்சம்பவம் நடந்தது என்றும் தெரியவந்தது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    திருச்சி:

    காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகள் ஏறி, இறங்கினர்.

    அதன் பின்னர் கரூர் நோக்கி அந்த ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகளில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    இந்த ரெயில் நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்துக்கு முன்னதாக மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது சரமாரியாக கருங்கற்களை வீசி தாக்கினர். இந்தக் கற்கள் ரெயிலின் பொதுப் பெட்டியில் வந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிதின் (வயது 30) என்ற பயணியின் நெற்றி பொட்டில் கல் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக சக பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். மேலும் இது தொடர்பாக கரூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்த போதும் ரெயில் நடுவழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை. தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் தயாராக நின்றனர். பின்னர் படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் அதே ரெயிலில் ஊருக்கு புறப்பட்டுச் செல்ல விரும்பியதால் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசையரசன், போலீஸ் ஏட்டு வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதை ஆசாமிகள் கல் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ஓடும் ரெயிலில் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனம் மோதியதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் அடிபட்டு கிடந்துள்ளது
    • மானைக் கைப்பற்றி அடிபட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ராமநத்தம் அருகே திருச்சி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் அடிபட்டு கிடந்துள்ளது. இது குறித்து ராமநத்தம் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    தகவல் சம்பவர் இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த விருத்தாச்சலம் வன சரக்கத்தில் இருந்து வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மானைக் கைப்பற்றி அடிபட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    • சங்கராபுரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவத்தன்று சுவாதி பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சுதாகர் மகள் சுவாதி (17). தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுவாதி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளாா். சம்பவத்தன்று சுவாதி பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறு த்தியதாக கூற ப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுவாதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விஷத்தை எடு த்து குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த சுவாதியை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மோட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சுவாதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைகேட்ட பெற்றோர், உறவினர்கள் சுவாதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ×