திட்டக்குடி அருகே வாகனத்தில் அடிபட்ட பெண் மான்

வாகனம் மோதியதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் அடிபட்டு கிடந்துள்ளதுமானைக் கைப்பற்றி அடிபட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாகனத்தில் அடிபட்ட பெண் மான்
வாகனத்தில் அடிபட்ட பெண் மான்
Published on: 

கடலூர்:

திட்டக்குடி அருகே ராமநத்தம் அருகே திருச்சி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் அடிபட்டு கிடந்துள்ளது. இது குறித்து ராமநத்தம் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவல் சம்பவர் இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த விருத்தாச்சலம் வன சரக்கத்தில் இருந்து வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மானைக் கைப்பற்றி அடிபட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com