search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மோட்டார்கள்"

    • குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களுக்கு அபராதம்.
    • 3 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது பல்வேறு நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதை யட்டி தலைஞா யிறுபகு திகளில் சட்டவி ரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு அவர்களது மின்மோட்டோர்களும் பரிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் எச்சரிக்கை செய்து இருந்தார்

    இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு ஐந்தாவது வார்டு சிந்தாமணி தெருவில் குடிநீர் குழாய்களில் சட்டவிராதமாக மின்மோ ட்டா ர் வை த்து குடிநீ ர் எடு ப்ப தாக கிடை த்த தகவ லின் பேரில் திடீரென பேரூராட்சி பணியாளர்கள் சென்று சோதனை செய்ததில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரிய வந்தது உடனடியாக பேரூராட்சி ஊழியர்கள் 3 மின் மோ ட்டா ர்க ளை யும் பறி முதல் செ ய்து பேரூ ராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் கூடியதாவது தலைஞாயிறில் பேரூராட்சியில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மின்னோட்டார்கள் பறிமுதல் செய்து வழக்கு தொடரப்பட்டும் மேலும்சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர்எடுப்பவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மின்சாரம், தோட்டக்கலை உள்பட பல துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் உள்ள திட்டம் குறித்து விளக்கினர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும், வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தகட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பேசியதாவது:-

    விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    துணை தாசில்தார் மாதவன் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் தனித்துறை ரமேஷ் நன்றி கூறினார்.

    ×