search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு வண்டி"

    • மேலூர் தெற்குபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப்பட்டியல் ஸ்ரீ காஞ்சி குளம் சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தெற்குப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக நடந்த இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 7வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17வண்டிகளும் பங்கேற்றன.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ேபாட்டியினை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

    • ஊமச்சிகுளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் மாடுகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி ஓட்டம் பிடித்தது.

    5 மைல் தூரத்தை பெரிய மாடுகள் தொட்டு, அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதற்கான முதல் பரிசாக ரூ.3 லட்சமும் 2-வது பரிசாக ரூ.2.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.2 லட்சம், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், சாரதிக்கு கொடி பரிசு ரூ.10 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    சிறிய மாடுகளுக்கான பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சிறிய மாடுகள் 3 மைல் தூர எல்லையை தொட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும் 2-வது பரிசாக ரூ. 1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரம், சாரதிக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.5 ஆயிரம் ஆகும்.

    போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர். 

    • ஏரியூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயம் சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூர் கிராமத்தில் உள்ள மலைமருந்தீஸ்வரர், முனிநாதன் மற்றும் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 66 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.

    முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை அலவாக்கோட்டை பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் பெற்றது.

    சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொண்குண்டுப்பட்டி செல்லை வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி சுந்தர்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு பந்தயத்தில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் புவனேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.

    • செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர்பிரதாப் லிவி (வயது 25) இவருடைய மனைவி அனு ஸ்ரீ.இவர்கள் விவசாயத்தை காப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டு வண்டியில் குமரியில் இருந்து சென்னைக்கு பயணமாக புறப்பட்டனர். குழந்தைகளோடு கடந்த ஜனவரி 11-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு ஒரு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்கிறார்கள். பின்னர் மாட்டு வண்டியை அங்கு நிறுத்தி இயற்கை விவசாயத்தை காப்போம். மருந்தில்லா உணவை கொடுப்போம். வரும் சந்ததிக்கு நோயில்லாத வாழ்க்கையை வலுப்படுத்துவோம்.

    செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் நாட்டு காளை மாட்டு இனங்களை காக்க வேண்டும். வெளிநாடு மாடுகள் இனத்தை அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

    இந்த மாட்டு வண்டி பயணத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி எடுத்துரைத்து அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மாட்டு வண்டியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரிடம் நடத்தி விசாரணையில், அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பதும், ஆற்றில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள விராமதி ஊராட்சியில் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பந்தையை மாடுகளுடன் சாரதிகளும் பங்கேற்றனர். இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, பந்தயம் என 3 பந்தயமாக விராமதியிலிருந்து நெடுமறம் ஊர் எல்லை வரை சென்று திரும்ப வேண்டும் என விழா குழு கமிட்டியிணரால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    3 கட்டங்களாக நடத்த ப்பட்ட எல்கை பந்தயத்தில் பெரிய மாடுகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசினை நல்லாங்குடி அமராவதி புதூர் முத்தையா சேர்வை, வேலு கிருஷ்ணன் அம்பலம் ஆகியோர் பெற்றனர்.2-ம் பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழி கடையும், 3-ம் பரிசை பாஸ்கரன் மகேஸ்வரியும் ,4-ம் பரிசை மாவூர் ஏஆர்.ராமச்சந்திரன் பெற்றனர்.

    நடுமாடு முதல் பரிசு பரளி யாழினி பெரிய கருப்பன், 2-ம் பரிசு நல்லாங்குடி அமராவதி புதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், முத்தையா சேர்வை, 3-ம் பரிசு நெய் வாசல் சாத்தி க்கோட்டை பெரியசாமி கருப்பையா சேர்வை, 4-ம் பரிசு காரைக்குடி மகிழ்மித்திரன் ஆகியோர் பெற்றனர். சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு நல்லாம்பட்டி ஆர்விபி நித்திஷ் மங்கை, 2-ம் பரிசு ஓனாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே அப்துல்லா, ஆர்.ஆர். சின்னம்மாள் வளையவயல், 3-ம் பரிசு கம்பம் வக்கீல் போது ராஜா, கூடலூர் அச்சரம் பட்டி மாதவ கோனார், நான்காம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோர் பெற்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×