search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் ஓடை"

    • மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இரணியல் :

    வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை அடிமடை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு மாண வன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி இருந்தது. மறுநாள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பத்மநாப புரம் கோட்டாட்சியர் கவுசிக் மழைநீர் ஓடையை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டு சென்றி ருந்தார்.

    இந்த நிலையில் மாணவன் இழுத்து செல்லப் பட்ட மழைநீர் ஓடை பெயரளவுக்கு மட்டும் சீரமைக்கப்பட்ட தாகவும், எதிரே உள்ள மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடைப்பு ஏற்பட்டு சாக் கடை தேங்கி நிற்கும் மழைநீர் ஓடைக்குள் பயணிகள் அவ்வப்போது விழுந்து அடிபட்டு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தி யாகி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் இந்த மழைநீர் ஓடையை போர்க்கால அடிப்படையில் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டோன்மென்ட் வாரியம் தடுப்புகளை அமைக்கவில்லை.
    • ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இப்படித்தான் ஆபத்து நேரிடுகிறது.

    சென்னை:

    பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதியில் பஜனை கோவில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இன்னும் பணிகள் நிறைவடையாமல் திறந்து கிடக்கின்றன. கம்பிகளும் ஆங்காங்கே வெளியே நீண்டு நிற்கின்றன. அந்த பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் சிலர் மரப்பலகைகளை போட்டு ஓடையை கடக்கிறார்கள்.

    பம்மலை சேர்ந்த விஜயகுமாரி (56) அந்த வழி யாக சென்ற போது தவறி ஓடைக்குள் விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சிலர் ஓடி சென்று காப்பாற்றி இருக்கிறார்கள். ஓடைக்குள் விழுந்த விஜய குமாரியின் உடலில் சில இடங்களில் கம்பி குத்தி கிழித்து காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விஜயகுமாரி கூறும்போது, "குழியை கடக்க ஒரு சில இடங்களில் மரப்ப லகைகளை வைத்து உள்ளனர். ஒரு பலகையில் நடந்து சென்ற போது தவறி விழுந்தேன். பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டோன்மென்ட் வாரியம் தடுப்புகளை அமைக்கவில்லை. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்." என்றார்.

    பம்மலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன் கூறுகையில், "பருவமழை நெருங்கி வருவதை அறிந்திருந்தும், அதிகாரிகள் மூன்று வாரங்களுக்கு முன்பு பணிகளைத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இப்படித்தான் ஆபத்து நேரிடுகிறது" என்றார்.

    • பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
    • மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    இரணியல் :

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா, தனது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் பெருவிளையில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது மகன் ஆஷிக் (வயது 7) மாடத்தட்டுவிளையில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அழைத்து வர ஜோஸ்பின் வல்ஷா சென்றார்.

    அந்த நேரத்தில் வில்லுக்குறியில் பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. மாடத்தட்டுவிளையில் இருந்து வில்லுக்குறி வரும் சாலை ஓரம் கட்டப்பட்டுள்ள மழை நீர் ஓடை வழியாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக ஆஷிக், மழைநீர் ஓடைக்குள் விழுந்தார். அவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்து ஜோஸ்பின் வல்ஷா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆஷிக், நெடுஞ்சாலைக்கு அடியில் உள்ள ஓடைக்குள் சிக்கி கொண்டான். உடனடியாக மாணவனை மீட்க ஓடையில் சிலர் இறங்கி தேடினார். மறுபக்கமும் இளைஞர்கள் சிலர் சென்று தேடினர். அப்போது நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மடையை தாண்டி ஆஷிக் வெளியே வந்தான். உடனடியாக அவனை மீட்ட இளைஞர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவன் ஆஷிக் சேர்க்கப்பட்டான். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷிக் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தொழில் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எம் முருகன், செயலாளர் பூக்கடை முருகன், பொருளாளர் மார்ட்டின் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கூறும்போது; மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழை நீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.

    இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. ஆஷிக் இதில் சிக்கியதாலே உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூர் நிர்வாகம் முன்பு கண்டன போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 2-ம் வகுப்பு பள்ளி மாணவன் மழை நீர் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×