search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீர்"

    • நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது.
    • தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக செல்கிறது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நாவல் ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.நாவல் ஏரியின் பாசன பரப்பளவு சுமார் 300 ஏக்கர் ஆகும்.

    இந்த நிலையில் நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக தாழைவாரியில் செல்கிறது.இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே உடனடியாக கோவிலூர் நாவல் ஏரியின் வரத்து வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி விவசாயிகளின் துயர் துடைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
    • இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நேற்று பெய்த மழையினால் டி.எம்.எப் மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீரை உறிஞ்சும் மோட்டார் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து மோட்டாரை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக ஒரு புதிய மோட்டார் ஒன்றை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து செல்லும் வரை சரி செய்தனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    ×