search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைரெயில் ரத்து"

    • ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால் நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், இருப்பு பாதை பிரிவு பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரெயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரெயில்நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இந்த மலைரெயில் பெரிதும் கவர்ந்து வருகிறது.

    இம்மலை ரெயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் பலத்த மழை பெய்தது.

    இந்த மழைக்கு கல்லார் ரெயில் நிலையம் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனது. மேலும் மரங்களும் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

    இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.மேலும் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை வழக்கம் போல் மலைரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிறப்பு மலைரெயில் சேவையில் எதிா்பாா்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்ததால் ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ெரயில் சேவை இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடா்பாக சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-ஊட்டியில் கோடை சீசனையொட்டி ரவுண்ட் டிரிப், ஜாலி ரெய்டு என்ற பெயா்களில் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ெரயில் சேவை கடந்த மே 22-ந் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

    வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை என 5 நாள்களில் தினசரி 3 முறை இந்த சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. ஜூலை 21-ந் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த சிறப்பு மலை ெரயில் சேவையில் எதிா்பாா்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லாததால் இன்று (ஜூன் 19) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×