search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர் சந்தை"

    • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • புரட்டாசி மாதம் என்பதால் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து பூக்கள் மாவட்டம் முழுவதும் மாநிலம் முழுவதும் திருவனந்தபுரம், வேளச்சேரி வழியாக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறது.

    ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர்மாட நாடார் குடியிருப்பு, காவல்கிணறு உள்ளிட்ட பகுதியில் இருந்து பிச்சி பூவும், திண்டுக்கல் கொடைரோடு, வத்தலகுண்டு, மதுரை, மானாமதுரை, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மல்லிகை பூ, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலத்தில் இருந்து அரளி, தோவாளை, ராஜாவூர், செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் ஆகிய பகுதியிலிருந்து அரளி, சம்பங்கி, கோழி கொண்டை, தாமரை, அருகம்புல் ஆகிய பூக்கள் சந்தைக்கு வந்து வியாபாரம் நடக்கிறது.

    புரட்டாசி மாதம் என்பதால் விசேஷ வீடுகளில் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.

    பூச்சந்தையில் ஒரு தாமரை பூ ரூ.2-க்கும். சீசன் இல்லாததாலும் மல்லிகைப்பூ இல்லாத காரணத்தாலும் மல்லிகைப்பூ வரத்து குறைவு இதனால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப்பூ ரூ.600 அரளி ரூ.60, கனகாம்பரம் ரூ.300, முல்லை ரூ.500 மரிக்கொழுந்து ரூ.120, மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

    • கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்
    • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்

    ஆரல்வாய்மொழி :

    மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் வாழுகின்ற இடங்களில் கொண்டாடப்படும் ஓணம். நாளை திருவோணம் அத்தப்பூ கோலமிட்டு உலகை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதால் அத்தப்பூ கோலமிட தேவையான பூக்கள் அனைத்தும் தோவாளை பூச்சந்தையில் கிடைக்கும் என்பதால் கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 300 டன் பூக்கள் ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் வந்து இறங்கியது. நேற்று முன்தினம் தொடங்கிய வியாபாரம் விடிய விடிய நடந்து வருகிறது.

    ஆனாலும் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500, பிச்சிப்பூ ரூ.600, பட்ட ரோஸ் ரூ.200, அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.400, சம்பங்கி ரூ.250, கிரோந்தி ரூ.100, மஞ்சள் கிரோந்தி ரூ.70, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.140, தாமரை ரூ.5, துளசி ரூ.40, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.100 உள்ளிட்ட பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.1000, ரூ.2 ஆயிரம் என விற்பனையான பூக்கள் இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. மாநாடு
    • விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநாட்டிற்கு பொதுமக்களும், தொண்டர்களும் அணி திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல கட்டமாக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவருகின்ற விதத்தில் யானை மீது நிர்வாகிகள் அமர்ந்தும், குதிரை மீது அமர்ந்தும் பொதுமக்களிடம் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டது. அதுபோன்று கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தலங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தோவாளை மலர் வணிக வளாகத்தில் மாநாட்டிற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் நடைபெற்றது.

    பிரசாரத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து மலர் வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகளிடமும் விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதிப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், நாகர்கோவில் வட்ட செயலாளர் வேலாயுதம் மற்றும் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்துசாமி ராஜேந்திரன், சபரி, முருகன், தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×