search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய தோவாளை மலர் சந்தை
    X

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய தோவாளை மலர் சந்தை

    • கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்
    • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்

    ஆரல்வாய்மொழி :

    மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் வாழுகின்ற இடங்களில் கொண்டாடப்படும் ஓணம். நாளை திருவோணம் அத்தப்பூ கோலமிட்டு உலகை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதால் அத்தப்பூ கோலமிட தேவையான பூக்கள் அனைத்தும் தோவாளை பூச்சந்தையில் கிடைக்கும் என்பதால் கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 300 டன் பூக்கள் ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் வந்து இறங்கியது. நேற்று முன்தினம் தொடங்கிய வியாபாரம் விடிய விடிய நடந்து வருகிறது.

    ஆனாலும் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500, பிச்சிப்பூ ரூ.600, பட்ட ரோஸ் ரூ.200, அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.400, சம்பங்கி ரூ.250, கிரோந்தி ரூ.100, மஞ்சள் கிரோந்தி ரூ.70, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.140, தாமரை ரூ.5, துளசி ரூ.40, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.100 உள்ளிட்ட பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.1000, ரூ.2 ஆயிரம் என விற்பனையான பூக்கள் இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×