search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்று நடுதல்"

    • உதயநத்ததில் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல்
    • தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது.


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த உதயநத்தம் தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு முத்ரா கடனை வழங்கி தொடக்கி வைத்தார். முன்னதாக அவர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இந்நிகழ்வில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.மோகன், கும்பகோணம் சரக அலுவலர் பூபதி, கைத்தறி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெ.பாலசுப்ரமணியன் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


    • தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    • தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

    தொப்பூர்,

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான இன்று (25-ந் தேதி) பசுமை தாயக தினமாகவும், மரக்கன்றுகள் நடும் நாளாகவும் பா.ம.க.வினர் மற்றும் பசுமை தாயக அமைப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிபட்டி கிராமத்தில் இன்று அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    அப்போது எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகலஹள்ளி ஊராட்சி சவுளூர் ஏரிக்கரையில் 20 வகையான பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மற்றும் நிழல் தரக்கூடிய 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யபட்டது. தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைசெயலாளர் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன், தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வெங்கடேஷ், முத்துகுமார், ராமசந்திரன், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காமராஜ், பச்சாக்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

    • மரக்கன்றுகள் நடும் பணி எர்ரனஅள்ளி சாலையில் தொடங்கப்பட்டது.
    • 2400 மரக்கன்றுகள் நடும் பணியினை உதவிக் கோட்டப் பொறியாளர் கவிதா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி எர்ரனஅள்ளி சாலையில் தொடங்கப்பட்டது.

    இதில் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி முதல் நாகதாசம்பட்டி சாலை வரையிலும், வெள்ளி சந்தை முதல் மாரண்டஅள்ளி சாலை வரையிலும் மற்றும் பாலக்கோடு புறவழி சாலைகளில் சாலையோரம் சுமார் 2400 மரக்கன்றுகள் நடும் பணியினை உதவிக் கோட்டப் பொறியாளர் கவிதா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    இப்பணியானது தொடர்ந்து உதவிப் பொறியாளர் நவீன், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஆசிரியர் ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் விவேகனந்தா மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

    ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், திம்ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அலுவலகம் முன்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ராயக்கோட்டை வனச்சரகர் பார்தசாரதி, தலைமையில் வனவர் சரவணன், நாராயணன், திம் ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன், மரக்கன்றுகளை நட்டனர்.

    இதில் ராயக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கஞ்சப்பன், பள்ளித் தலைமை ஆசிரியர் ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் விவேகனந்தா மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.

    • பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது.
    • மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்அலி கான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    7 நாட்கள் நடந்த முகாமில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தம் செய்தல், சாலைகளை தூய்மைப்படுத்துதல், டெங்கு விழிப்புணர்வு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, யோகாசன பயிற்சி, மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் இந்திரஜித் தலைமையில் ஆசிரியர் குழுவினர் செய்தனர். உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

    ×