ராயக்கோட்டை பகுதியில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியர் ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் விவேகனந்தா மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.
ராயக்கோட்டை பகுதியில் மரக்கன்று நடும் விழா
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், திம்ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அலுவலகம் முன்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ராயக்கோட்டை வனச்சரகர் பார்தசாரதி, தலைமையில் வனவர் சரவணன், நாராயணன், திம் ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன், மரக்கன்றுகளை நட்டனர்.

இதில் ராயக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கஞ்சப்பன், பள்ளித் தலைமை ஆசிரியர் ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் விவேகனந்தா மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com