மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் பணி எர்ரனஅள்ளி சாலையில் தொடங்கப்பட்டது.2400 மரக்கன்றுகள் நடும் பணியினை உதவிக் கோட்டப் பொறியாளர் கவிதா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
எர்ரணஅள்ளி சாலையில் நெடுஞ்சாலை துறையினர் மரக்கன்றுகள் நடும் போது எடுத்த படம்.
எர்ரணஅள்ளி சாலையில் நெடுஞ்சாலை துறையினர் மரக்கன்றுகள் நடும் போது எடுத்த படம்.
Published on

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி எர்ரனஅள்ளி சாலையில் தொடங்கப்பட்டது.

இதில் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி முதல் நாகதாசம்பட்டி சாலை வரையிலும், வெள்ளி சந்தை முதல் மாரண்டஅள்ளி சாலை வரையிலும் மற்றும் பாலக்கோடு புறவழி சாலைகளில் சாலையோரம் சுமார் 2400 மரக்கன்றுகள் நடும் பணியினை உதவிக் கோட்டப் பொறியாளர் கவிதா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

இப்பணியானது தொடர்ந்து உதவிப் பொறியாளர் நவீன், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com