search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயில்சாமி"

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இவரது உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இவரது உடலுக்கு நடிகர் செந்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் உடைந்து கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, மயில்சாமி நல்ல நடிகர், நடிகர் மட்டும் இல்லை எதார்த்தமான மனிதர். அவர் எல்லோரிடமும் நன்றாக பழகுவார். அன்பாக பழகக்கூடியவர். மயில்சாமிகிட்ட நைட் கூட பேசுனே. என்று செந்தில் கண்கலங்கிக் கொண்டே பேசினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • இவரது மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

     

    மயில்சாமி - கமல்ஹாசன்

    மயில்சாமி - கமல்ஹாசன்

    இந்நிலையில் மயில்சாமியின் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

    • பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி.
    • தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர்.

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது.

    மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி. திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமி மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். 

    • சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்து சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி.
    • கடைசியாக ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்திற்காக நடிகர் மயில்சாமி கொடுத்த டப்பிங் வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மயில்சாமி மறைவால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர். அவரது மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியுள்ளதாவது:- கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகள் செய்துள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்து சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி. அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என கூறியுள்ளார்.

    இதனிடையே, கடைசியாக 'கிளாஸ்மேட்ஸ்' படத்திற்காக நடிகர் மயில்சாமி கொடுத்த டப்பிங் வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    • பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.
    • பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

    சென்னை:

    தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.

    இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

    ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

    ×