search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய கல்வி அமைச்சகம்"

    • பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.
    • நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்க கூடாது.

    தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.

    மாணவர்களைச் சேர்ப்பதற்காக பயிற்சி நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கவோ, ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்கவோ கூடாது.

    பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தொடர்பான எந்தவொரு தவறான விளம்பரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.
    • குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.

    புதுடெல்லி:

    நீட், ஜே.இ.இ. பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்,

    * 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. 16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்தவர்களையே நீட் பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்.

    * மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.

    * குற்ற வழங்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.

    * விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • டெல்லியில் ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துகின்றனர்.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துவது தொடர்ந்து குறைந்து வருகிறது.

    புதுடெல்லி :

    நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்ட நடவடிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

    அதில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * 2021-22-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளி அளவில் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடையில் நிற்பது பீகார் மாநிலத்தில் 20.46 சதவீதமாகவும், குஜராத்தில் 17.85 சதவீதமாகவும், அசாமில் 20.3 சதவீதமாகவும், ஆந்திராவில் 16.7 சதவீதமாகவும், பஞ்சாபில் 17.2 சதவீதமாகவும், மேகாலயாவில் 21.7 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 14.6 சதவீதமாகவும் இருந்துள்ளது.

    * மேற்கண்ட 7 மாநிலங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது தேசிய சராசரியான 12.6 சதவீதத்தைவிட அதிகம் ஆகும்.

    * மேற்கு வங்காளத்தில் 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-22-ம் ஆண்டில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது குறைந்துள்ளது. இது தொடக்கப்பள்ளி அளவிலாகும்.

    * டெல்லியிலும் ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துகின்றனர். (மேற்கு வங்காளம், டெல்லி நிலவரம் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகவில்லை).

    * மத்திய பிரதேச மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நின்று விடுவது 2020-21-ல் 23.8 சதவீதமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே இது 10.1 சதவீதமாக அதிரடியாகக் குறைந்துள்ளது.

    * மராட்டிய மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது 2020-21-ல் 11.2 சதவீதமாக இருந்து, மறு ஆண்டில் 10.7 சதவீதமாகக் குறைந்தது.

    * உத்தரபிரதேச மாநிலத்தில், பாஸ்தி (23.3 சதவீதம்), புதான் (19.1 சதவீதம்), எட்டவா (16.9 சதவீதம்), காசிப்பூர் (16.6 சதவீதம்), எட்டா (16.2 சதவீதம்), மகோபா (15.6 சதவீதம்), ஹர்தோய் (15.6 சதவீதம்), அசம்கார் (15 சதவீதம்) மாவட்டங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்துள்ளது.

    * ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துவது தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் பழங்குடி மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்துவது அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×