நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்

மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.
நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்
Published on

புதுடெல்லி:

நீட், ஜே.இ.இ. பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்,

* 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. 16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்தவர்களையே நீட் பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்.

* மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.

* குற்ற வழங்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.

* விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com