search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கொள்கை முறைகேடு"

    • மகுண்ட சீனிவாசலு ரெட்டி மதுபான சில்லறை விற்பனை குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் செய்தார்.
    • டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சரத் சந்திரா ரெட்டி, அருண் பிள்ளை, அபிஷேக், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திர மாநில, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி. இவரது மகன் ராகவ் (வயது 30). ராகல் ஆந்திராவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    இவர் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ரூ 180 கோடி ஆதாயம் அடைந்ததாக மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ராகவ் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அமலாக்க பிரிவு துறை அதிகாரிகள் ராகவை கைது செய்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிறப்பு நீதிபதி நரேஷ் குமார் லகாராகவை 10 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் சாராத பிரபலங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.100 கோடி வரை நன்கொடை அளித்தது தெரிய வந்தது. முறை கேட்டில் ராகுவிற்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க பிரிவு துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    அதில் மகுண்ட சீனிவாசலு ரெட்டி மதுபான சில்லறை விற்பனை குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் செய்தார்.

    ஆனால் அவரது மகன் ராகவ் சிண்டிகேட் அமைத்து ரகசியமாக ஊழலில் ஈடுபட்டதாக கோர்ட்டில் தெரிவித்தனர். ஊழலில் சவுத் குரூப் மற்றும் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ந் தேதி ஒத்தி வைத்தார்.

    ஏற்கனவே டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சரத் சந்திரா ரெட்டி, அருண் பிள்ளை, அபிஷேக், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் மதுபான முறைகேடு வழக்கில் ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
    • தினேஷ் அரோரா அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு அடுத்தபடியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அதிகாரத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் டெல்லி அரசின் மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக துணைநிலை ஆளுனர் வினய்குமார் சக்சேனா பரிந்துரையின்பேரில் சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டார்.

    சோதனையின்போது எந்த ஆவணமும் கைப்பற்றபடவில்லை என்றும் அரசியல் வழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோராவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த வாரம் அவருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியுள்ளார். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதாக சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.

    அந்த மனுவில் வழக்கு விசாரணைக்கு தினேஷ் அரோரா முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் அரோரா அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    • மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2021-2022 ஆண்டில் அமல்படுத்தியதில் நடந்த முறைகேடு குறித்து டெல்லி கவர்னர் பரிந்துரையின்பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீதும் வழக்கு பதிவாகி இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை பல சோதனைகள் நடத்தி இருந்தது. மதுபான வியாபாரி சமீர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மதுபான விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • அமலாக்கத்துறை இதுவரை 103-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி இருந்தது.
    • மதுபான விநியோகஸ்தர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

    டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை (2021-22-ம் ஆண்டு) அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை 103-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி இருந்தது. சி.பி.ஐ.யும் சோதனை நடத்தியது. இந்த நிலையில் மதுபான விற்பனை கொள்கை வழக்கு தொடர்பாக இன்று டெல்லி, பஞ்சாப், ஐதராபாத் உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மதுபான விநியோகஸ்தர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

    குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களிடம் விசாரணை நடத்தியபோது கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் இச்சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனை தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, "500-க்கும் மேற்பட்ட சேதனைகள், 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான ஆதாரங்களை கண்டறிய 3 மாதங்களாக 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். அவர் எதுவும் செய்யாததால் எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
    • ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் சில நகரங்கள், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் இதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். மேலும் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

    மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். டெல்லி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இன்று 2-வது கட்டமாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் சில நகரங்கள், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மதுபான வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், வினியோக சங்கிலி நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி திகார் ஜெயிலில் உள்ள ஆம்ஆத்மி கட்சி தலைவரும், மந்திரியு மான சத்யேந்தர் ஜெயினிடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ×