search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மதுபான முறைகேடு"

    • மகுண்ட சீனிவாசலு ரெட்டி மதுபான சில்லறை விற்பனை குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் செய்தார்.
    • டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சரத் சந்திரா ரெட்டி, அருண் பிள்ளை, அபிஷேக், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திர மாநில, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி. இவரது மகன் ராகவ் (வயது 30). ராகல் ஆந்திராவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    இவர் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ரூ 180 கோடி ஆதாயம் அடைந்ததாக மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ராகவ் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அமலாக்க பிரிவு துறை அதிகாரிகள் ராகவை கைது செய்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிறப்பு நீதிபதி நரேஷ் குமார் லகாராகவை 10 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் சாராத பிரபலங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.100 கோடி வரை நன்கொடை அளித்தது தெரிய வந்தது. முறை கேட்டில் ராகுவிற்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க பிரிவு துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    அதில் மகுண்ட சீனிவாசலு ரெட்டி மதுபான சில்லறை விற்பனை குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் செய்தார்.

    ஆனால் அவரது மகன் ராகவ் சிண்டிகேட் அமைத்து ரகசியமாக ஊழலில் ஈடுபட்டதாக கோர்ட்டில் தெரிவித்தனர். ஊழலில் சவுத் குரூப் மற்றும் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ந் தேதி ஒத்தி வைத்தார்.

    ஏற்கனவே டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சரத் சந்திரா ரெட்டி, அருண் பிள்ளை, அபிஷேக், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் மதுபான முறைகேடு வழக்கில் ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×