search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு- 40 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு- 40 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

    • மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
    • ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் சில நகரங்கள், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் இதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். மேலும் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

    மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். டெல்லி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இன்று 2-வது கட்டமாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் சில நகரங்கள், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மதுபான வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், வினியோக சங்கிலி நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி திகார் ஜெயிலில் உள்ள ஆம்ஆத்மி கட்சி தலைவரும், மந்திரியு மான சத்யேந்தர் ஜெயினிடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    Next Story
    ×